பகுதி 10 – திருமண வைபவங்கள், மற்றும் கலாசார நிகழ்வுகளில் ஆடைகள்
பல்வேறு கலாசாரங்கள் எமது திருமண சடங்குகளுக்குள் ஏற்படுத்திய மாற்றம் போலவே திருமண ஆடைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் சரி பிழை சொல்ல முடியாது, ஏனென்றால் ஒவ்வொருவர் திருமண நிகழ்வுகளும் அவரவர் விருப்பங்களுக்கமைய அமைவது முக்கியமாகும்.
ஆனால் தமிழர் கலாசாரம் ஆடைகளில் இருந்தால் நல்லது என்பது ஓர் அபிப்பிராயம். இன்று வட இந்திய, குஜராத் பாணிகளில் மணமக்களின் ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. முடிந்தால் தமிழ்க் கலாசாரத்தைப் பற்றியும் இந்த விடயத்தில் யோசிக்கலாம். நூறு வீதம் கலாசாரத்தைப் பின்பற்றுவது கடினம் என்றாலும் இவ்வாறான சில விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்.
மேலும் திருமண ஆடைகளுக்கான செலவும் எடுத்து நோக்க வேண்டிய ஒன்று. திருமண வாழ்வு தான் சிறப்பானதாக அமையும் வேண்டுமே தவிர திருமண நிகழ்வு அல்ல. ஆனாலும் திருமண நிகழ்வு என்பது ஒவ்வொரு பெண்ணினதும் ஆணினதும் பெரும் கனவாக இருக்கும்.

அதில் பல தரப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் மண்டப அலங்காரங்கள் உட்பட பிரதான இடம் பிடிப்பது திருமண ஆடைகள் மற்றும் மணப்பெண் அலங்காரமாகும். இதற்கு செலவு செய்யும் போது பல வழிகளில் ஏற்கனவே அண்மையில் திருமணம் செய்து கொண்ட நண்பர்கள் உறவினர்களின் அனுபவங்களை கேட்டறிவது ஆடை மற்றும் அலங்காரத் தேர்வுகளை இலகுவாக்கலாம். மேலும் திருமண ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த விரும்புவர்களாக இருந்தால் அதற்கேற்ப தெரிவு செய்வதோடு அவற்றைப் பாதுகாத்து வைக்கும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.சில ஆடைகள் அணிகலன்கள் வாடகைக்கும் பெற்றுப் பயன்படுத்தக் கூடிய வசதிகளும் இன்று உண்டு.
திருமண விழாக்களுக்கு விருந்தினர்களாக செல்பவர்கள் தமிழ் அல்லது இந்து திருமண நிகழ்வாக இருக்கும் போது பெரும்பாலும் மணப்பெண் செந்நிறம் சார்ந்த ஆடைகளையே தெரிவு செய்வது வழக்கமாக இருக்கிறது. எனவே இதையும் கருத்தில் கொண்டு நாம் விழாவில் தனித்து தெரிய வேண்டும் என்றால் வேறு நிறங்களில் ஆடைகளை அணியலாம் என்பது ஓர் அபிப்பிராயம்.
பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு
பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்
பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி
பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்






