பகுதி 9 – ஆடையும் ஒப்பீடும்
நாமும் எமது தேவைகளும், எமது பொருளாதார நிலையும், சார்ந்திருக்கும் நிலையும் மற்றவரிடம் இருந்து எப்போதும் வேறுபட்டே தான் இருக்கும். ஒரு போதும் எமது வாழ்வு இன்னொருவரின் வாழ்வு போல் எல்லா வகையிலும் இருப்பது முடியாதல்லவா? ஆனாலும் ஒப்பீடு தவிர்க்க முடியாததும் இயற்கையானதும் கூட. ஆண் பெண் யாருக்கும் இது பொருந்தும். இவ்வாறிருக்க, அதை நாம் தவிர்த்தும் கொள்ளலாம். அதீதமாக நம் ஆடை அலங்காரங்களை யாரோடும் ஒப்பிடுவது அவசியம் இல்லை.
இது பிரபலங்களின் உடைகளுடன் ஒப்பிடுவதற்கும் பொருந்தும். Branded ஆக அலங்கரிப்பவர்களோடு ஒப்பீடு செய்வதற்கும் பொருந்தும். நண்பர்கள், உறவினர்கள், ஏனைய தெரியாதவர்களோடு ஒப்பீடு செய்வதற்கும் பொருந்தும். ஒப்பீடு ஒருவகை ஆர்வம் மற்றும் தேடல் ஆகும். அதுவே தொட்டதற்கெல்லாம் ஒப்பீடு செய்து கொண்டு, எமது தனித்தன்மையை உணராமல் இருப்பது நல்லதல்ல. ஆடை விடயங்கள் மட்டுமன்றி சாதாரணமாக வாழ்வியலிலும் ஒப்பீடு பெரும் பங்கு வகிக்கிறது.







No Responses