ஆடைகளை அறிந்து அணிவோம் – பகுதி 9

பகுதி  9 – ஆடையும் ஒப்பீடும்

நாமும் எமது தேவைகளும், எமது பொருளாதார நிலையும், சார்ந்திருக்கும் நிலையும் மற்றவரிடம் இருந்து எப்போதும் வேறுபட்டே தான் இருக்கும். ஒரு போதும் எமது வாழ்வு இன்னொருவரின் வாழ்வு போல் எல்லா வகையிலும் இருப்பது முடியாதல்லவா? ஆனாலும் ஒப்பீடு தவிர்க்க முடியாததும் இயற்கையானதும் கூட. ஆண் பெண் யாருக்கும் இது பொருந்தும். இவ்வாறிருக்க, அதை நாம் தவிர்த்தும் கொள்ளலாம். அதீதமாக நம் ஆடை அலங்காரங்களை யாரோடும் ஒப்பிடுவது அவசியம் இல்லை.

இது பிரபலங்களின் உடைகளுடன் ஒப்பிடுவதற்கும் பொருந்தும். Branded ஆக அலங்கரிப்பவர்களோடு ஒப்பீடு செய்வதற்கும் பொருந்தும். நண்பர்கள், உறவினர்கள், ஏனைய தெரியாதவர்களோடு ஒப்பீடு செய்வதற்கும் பொருந்தும். ஒப்பீடு ஒருவகை ஆர்வம் மற்றும் தேடல் ஆகும். அதுவே தொட்டதற்கெல்லாம் ஒப்பீடு செய்து கொண்டு, எமது தனித்தன்மையை உணராமல் இருப்பது நல்லதல்ல. ஆடை விடயங்கள் மட்டுமன்றி சாதாரணமாக வாழ்வியலிலும் ஒப்பீடு பெரும் பங்கு வகிக்கிறது.

மற்றவர் அணியும் ஆடைகள் போலவே நானும் அணிய வேண்டும் என்ற எண்ணம் அதீதமாக இருப்பது உளவியல் ரீதியாக தீர்வு காண வேண்டிய ஒன்று. நாம்  மற்றவர்களுடைய விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்கும் அதீத மதிப்பளிப்பதும் எமது தனித்தன்மையை நாமே உணராமல் போவதும் இதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம். ஆகவே ஒப்பீடு அளவோடும் அறிவோடும் இருக்கலாம்.

 

பகுதி 1 – அறிமுகம்

பகுதி 2 – ஆள் பாதி ஆடை பாதி

பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு

பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்

பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி

பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்

பகுதி 7 – சினிமா, சீரியல், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர கலாசார நிகழ்வுகள் வியாபார நோக்கம் கொண்டவை.

பகுதி 8 – வயதும் ஆடையும்

Add Comment