பகுதி 8 வயதும் ஆடையும்
தலைப்பை பார்த்ததும் பழமை வாதம் என்று ஒதுக்கத் தோன்றும். அவ்வாறு அல்ல, தாத்தா பாட்டி என்றால் சேலையும் வேட்டியும் என்று சொல்ல விளையவில்லை. மாறாக அவரவர் வசதிக்கு(comfort) ஏற்ப ஆடைகள் மாறலாம்.
இன்று பெரிய பாரம்பரிய இடைவெளி ஒன்று உருவாகியுள்ளது. ஓர் சமூக மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிலர் சொல்லக்கேட்டிருக்கலாம் அந்தக் காலத்தில் எமக்கு கிடைக்கவில்லை, இப்போது கிடைக்கிறது நாங்கள்
அணிகிறோம் என்று. இதிலேதும் தவறு இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் அந்தக் காலத்திலும் நாகரிகங்கள் – மேலே சொன்ன trend fashion எல்லாம் இருந்தன. அவற்றிற்கேற்ப தாமே தைத்தும் அணிந்து கொண்டார்கள். இன்று தவறிவிழுந்தால் கடைகள் இன்னும் இணைய வியாபாரங்கள் நிறைய உண்டு. ஆக, ஆடைகளுக்கு செய்யும் செலவும், புதிய வடிவமைப்புகளின் விரைவான பரவுகையும், இதன் முக்கியத்துவமும் தான் அதிகரித்து உள்ளனவே தவிர அந்த நாட்களில் இல்லை என்பதெல்லாம் சரியல்ல.
“வாழ்க்கைப்பண்பு உயர உயர ஆடைகளின் உயரமும் மேலே ஏறுது; அன்று தங்கைமார்கள் அணிந்ததெல்லாம் இன்று தாய்மார்களின் ஆடையாயிற்று” என்று ஆடைகளைக் குறித்து பாடல்களும் பாடியிருக்கிறார்கள். அது பாடல்களோடு நின்றுவிடுகிறதோ என்னவோ?
வயதை இங்கே குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் உள்ளது. அது, வயதும் ஆடையும் அணிகலன்களும் பொருந்தும் போது தம்மை விட இளையவர்களிடம் ஏற்படுத்துகின்ற மரியாதை தான் அதற்கான காரணம்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஆடை வித்தியாசம் அவசியம் ஆகும். நாம் எமது சமூக கடப்பாடுகளில் முன்னுதாரணமாய் திகழ வேண்டியவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு எமது நியாயமான ஆசைகளை ஆடை அணிகலன்கள் விஷயத்தில் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
இது இவ்வாறிருக்க , உங்கள் பிள்ளைகள் இளம் வயதினராயின் அவர்களது ஆடைகள் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் நியாயமான ஆசைகளைப் பாராட்டவும் தெரிந்திருங்கள். அவர்களுக்காக சிந்தியுங்கள்; அவர்கள் ஆடை ஆசைகளைப் புரிந்து கொள்ளுங்கள்; தேர்வு செய்வதில் உதவுங்கள். உங்கள் பொருளாதாரத்திற்கேற்ப எவ்வாறு அவர்கள் விரும்பும் வகையில் ஆடைகளை த் தெரிவு செய்வது என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
இதே போல, பாடசாலைக்கு ஆசிரியர்கள் எப்படி அணிந்து வர வேண்டும்? ஆறாவது பகுதியிலே, புலம்பெயர்ந்தோர் ஆடைகளால் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிக் கதைத்தோம் அல்லவா? ஒரு சிறு காலப் பகுதியில்
இவர்களால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட முடிகிறது எனும் போது ஒவ்வோர் மாணவரின் வாழ்விலும் பெரும்பகுதியை நிரப்பிவிடும் ஆசிரியர்கள் எவ்விதம் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறதல்லவா?
சிந்திப்போம்…செயற்படுவோம்….
நன்றி
பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு
பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்
பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி
பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்







No Responses