இது உங்களின் எண்ணச்சிதறல்களில் ஒரு துளி. கடல் கடந்து வாழும் உறவுகளை இணைக்கும் பாலம். உங்கள் அனுபவங்களை இத்தளத்தில் பகிர்ந்து உங்கள் உறவுகளை பலப்படுத்தி வளப்படுத்துங்கள்.
இன்று உங்கள் கண்களுக்கு விருந்து தந்துகொண்டிருப்பது எம்மவர்களின் அரிய படைப்புக்களே. எம் தமிழ்த்தாயை கௌரவிக்கும் வகையில் நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சியே இது. எமது சிந்தனைகளை எழுத்து மூலாக்கங்களாகக்கொண்டு இத்தளத்தில் வெளியாகியிருப்பதே இதை நாங்கள் சுமப்பதற்கு அன்று, நீவிர் சுவைப்பதற்கே.
“மறைவாகப் பழங்கதைகள் நமக்குள்ளே சொல்வதிலோர் மகிமையில்லை” என்று மிக உயர்ந்த பீடத்திலிருந்து அன்றே உலகைப் பார்த்துவிட்ட பைந்தமிழ்ப் புலவன் பாரதி எச்சரித்தான். அவனது எச்சரிக்கை பலனளித்தது. பாரெங்கும் பைந்தமிழைப் பரப்பித் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் வலம் வர வழி வகுத்தது.
;
சான்றோர்கள் எம் முயற்சிகளில் குற்றங்கள், குறைகளைக் காணலாம். எனவே தயவூகூர்ந்து உங்கள் விமர்சனங்களை எமக்குத் தெரிவித்தால் எதிர்வரும் காலங்களில் எமது முயற்சிகள் மேலும் மெருகேறும் என்ற நம்பிக்கையூடன்…………………….
சமூக விழுமியங்கள்
• அன்பு,கருணை,இரக்கம்,பொறுமை என்பன அமைதிக்கு வித்திடும்.
• பொறுமை,கோபம்,அகங்காரம் என்பன தவிர்க்க வேண்டியவை.
• மனிதன் தனது எண்ணங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதன் மூலம்; அவற்றைச் சரிவரக் கண்காணித்து நிருவகிப்பதன் மூலம்; நன் முறையில்; நெறிப்படுத்துவதன் மூலம், செம்மையான எண்ணங்களை உருவாக்கலாம். கெட்ட எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளவூம் முடியூம்.
• சுய கட்டுப்பாட்டின் ஆரம்பம், அடித்தளம் யாவூமே மனக் கட்டுப்பாடுதான். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் மனிதனே, தனக்கே தான் விதித்துக் கொள்ளும் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலைக்கவும், நீடிக்கவூம் வழி சமைக்கின்றான்.
• மனக் கட்டுப்பாடு தரும் பெரும் விளைச்சல்தான் மன அமைதி, மனச் சாந்தி, மனத் தூய்மை ஆகும். இந்த நிலையை அடைந்த ஒருவன் கோபம் கொள்ளமாட்டான். எனவே, பாவஞ் செய்யச் சந்தர்ப்பம் இல்லை. ஆசை கொள்ள மாட்டான்;;; அதனால் அவனிடம் கவலைகள் இருக்க நியாயம் இல்லை. தோல்வியடைய மாட்டான்.
• மன அமைதி பெற்ற மனிதன் தானும் நல்லபடி வாழ்கிறான், எடுத்த கருமங்களில் வெற்றியடைகிறான். அவ்வாறே, ஏனையோரையூம் வாழ விடுகிறான்; அதனால் வாழ்விக்கிறான். எல்லோருடைய அன்பையயும், ஆதரவையூம், நம்பிக்கையையூம்,நல்லெண்ணத்தையூம் பெற்றுக்கொள்கிறான். சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றான்.






