ஜோதிடமும் எமது வாழ்க்கையும்

பலரது நம்பிக்கை சார்ந்த விடயங்களை ஆராய்வதால், இந்தப் பகுதி பெரும்பாலும் வினாக்களையே தொடுத்து நிற்கப்போகின்றது. எனவே, விடை காணப்போவது நீங்களே.

இன்று இந்து மதத்தவர் மட்டுமன்றி எல்லாருமே ஏதாவது ஒருவழியில் எதிர்காலத்தை அறிய விளைகிறார்கள்.
குறைந்தது இன்றைய ராசி பலன் ஆவது வாசித்திருப்பாரகள். அல்லது எண் கணித ரீதியாக என்ன பலன் பிறந்த நாளுக்கு என்ன பலன் என்றெல்லாம் பாத்திருப்பார்கள். திருமணப்பொருத்தம்
பார்த்திருப்பார்கள். சரி, ஜோதிடம் எதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது? எந்த அளவுக்கு நாம் ஜோதிடத்தை பயன்படுத்த முடியும்?
திருமணப்பொருத்தம் பார்ப்பது அவசியமா? காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது அவசியமா?
பத்துப் பொருத்தம் பார்த்தால் போதுமா?
பத்துப் பொருத்தத்தோடு ஏன் எண்கணிதத்தையும் பார்க்கிறார்கள்?
வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஜோதிடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?
பொருத்தம் பார்த்து சேர்த்த திருமணங்கள் ஏன் பின்னால் முறிவடைகின்றன? திருமணத்திற்கான தகுதியை இவை விபரிக்கின்றனவா?
காதலோடு பொருத்தமும் பார்த்து சேர்த்த திருமணங்கள் ஏன் முறிவடைகின்றன? பரிகாரங்கள் எவ்வாறு சொல்லப்படுகின்றன?
பரிகாரங்களுக்குப் பின் பலன் கிடைக்கின்றனவா? ஆலயங்களுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
இரு தாரம், தாரக்குற்றம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், சூரியன் செவ்வாய் சேர்க்கை இவையெல்லாம் என்ன?

வாழையுடன் திருமணம் என்பது என்ன? எதற்காக?குழந்தை தாய்க்கு கூடாது, தந்தைக்கு கூடாது, விற்றுப் பெற வேண்டும் இவ்வாறெல்லாம் சொல்வது எவ்வாறு? கிரகப்  பெயர்ச்சி என்பது என்ன ? தசாபுத்தி என்றால் என்ன?ஜோதிடர்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கிறது? திறமான ஜோதிடர்களை எவ்வாறு அறிந்து கொள்வது? வம்பு, வழக்கு , நாடுகளுக்கும் ஜோதிடம் பார்க்கலாமா?
ஜோதிடத்தைப் கொண்டு வாழ்வைத் திட்டமிட முடியுமா? எவ்வாறெல்லாம் நீங்கள் எதிர்காலத்தை அறிந்து
செயற்படுகிறீர்கள்? அதுவும் சரியாவோ பிழையாகவோ நடந்திருக்கிறது. அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

Add Comment