கணக்கு தவறக்கூடாது

சிறுமி ஒருத்தி இரண்டு மாம்பழங்கள் வைத்திருந்தாள்.இதை கண்ணுற்ற அவளது தாய் மாம்பழத்தில் ஒன்றை தனக்கு தருமாறு கேட்டாள்.

தாய் கேட்ட மறுகணமே சிறுமி மாம்பழத்தில் ஒன்றை கடித்துவிட்டாள். மற்றதையாவது தனக்கு தருவாள் என சிறுமியின் தாய் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் மற்றதையும் சிறுமி கடித்துவிட்டாள்.toddler-eating-mango-15198923

தாய்க்கோ ஏமாற்றம்……….தன் பிள்ளைக்கு தன் மீது பாசம் இல்லையே என மனதில் எண்ணியவாறு இருக்கையில்; சிறுமி தான் கடித்த மாம்பழத்தில் ஒன்றை தாயிடம் கொடுத்தவாறே ”அம்மா இதுதான் ரொம்ப சுவையாக உள்ளது இதை நீங்க சாப்பிடுங்க”என்றாள்.

பெரும் அதிர்ச்சியடைந்த தாய் ,தான் பிள்ளையின் பாசத்தை பிழையாக உணர்ந்து விட்டேனே என்ற குற்ற உணர்வுடனேயே தனது மகளை கட்டியணைத்தாள்.

 

நீதி: நீங்கள் எவ்வளவு அனுபவம் மற்றும் அறிவு வாய்ந்தவராயினும் மற்றவரை பற்றி கணிக்கும்போது அவரது செயற்பாடினை மேலோட்டமாக பாராது ஆழ யோசித்து கணியுங்கள்.இல்லையேல் இக் கதையில் வரும் தாயின் நிலைதான் நமக்கும்.

‘மனக்கணக்கு தவறினும் மனிதரைப் பற்றிய கணக்கு தவறக்கூடாது’  

Add Comment