🤫 பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி
ஆடை நாகரிகம்- clothing fashion setting அல்லது trend setting என்பது வியாபார யுக்தி. இது இல்லை என்றால் எப்படி வியாபாரம் நடக்கும்? இந்த விஷயத்தை புரிந்து கொள்வதோடு எமது பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்துவது நல்லது.
பழைய காலத்தில் ஆடைகள் மட்டுமன்றி வேறு பொருட்களுமே நீண்டநாள் உழைக்கக் கூடியதாகவும் இருந்தது எனலாம். ஆதலால் தான் நமது பெரியவர்களை எடுத்துக்கொண்டால் ஆடைகளையும் சரி வேறு பொருட்களையும் சரி ஆராய்ந்து விலைக்குத் தக்க பொருளின் பெறுமதி value for moneyஐ பார்த்து பார்த்து வாங்குவதை அவதானித்திருப்போம்.
தொழிநுட்ப ரீதியான இப்போதைய பொருட்கள் வேண்டுமானால் அவர்களுக்கு கொள்வனவு செய்வதில் கடினமாக இருக்கலாம். மேலும் அவர்களின் ஆடைகளையும் பொருட்களையும் பத்திரப்படுத்தும் அழகே தனி தான். பல விதங்களில் மீளப் பயன்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளை சுருக்கி அந்தக் காலத்திற்கு ஏற்ப சிறந்த நாகரித்தோடு தான் காட்சி அளித்தார்கள் என்றே
சொல்லலாம்.
இன்று, எல்லா விதங்களிலும் அடிக்கடி நாம் மாற்றங்களை விரும்புகிறோம்; மற்றவர்களோடு அதிகமாக ஒப்பீடு செய்து கொள்கிறோம்; நாமாக ஓர்
ஆடம்பரம் என்ற பெயரில் ஓர் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்; எமது ஆடைத் தேவைகள் சில வேளைகளில் அநாவசியமாகவே அதிகரித்து வைத்திருக்கிறோம் அல்லது வணிக உலகத்தின் உத்திகளால் அதிகரித்துக் கொள்ளத் தள்ளப்படுகிறோம்.
எமது வீணாக்கக் கூடிய சம்பளம் disposable income இன்று அதிகரித்திருப்பது இந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய வழியும் அமைத்துக் கொடுப்பதால் முதலில் இந்த ஆடை நாகரிகம் சிறிது நாளைக்கு பின்னர் வேறொன்று என்று போகையில்
நாமும் அதன் பின்னால் சென்று கொள்வனவுகளை மேற்கொள்கிறோம்.

தற்போதைய போக்கு trend என்னவென்றால் இணையதளம் முலம் ஆடைக்கொள்வனவுகள். விற்பனை நிலையங்களுக்கு செல்லாமலேயே கையில் உள்ள ஸ்மார்ட் தொலைபேசி மூலம் fashion மற்றும் trend setting எல்லாம் உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. தொலைபேசியிலேயே இன்று தெரிந்தவர் தெரியாதவர் என்று மட்டுமல்லாது நடிக நடிகையர் மற்றும் பிரபலங்களையும் ஒப்பீடு செய்ய முடிகிறது. இன்று, Replica என்ற பதத்தோடு நடிக நடிகையர் திரைப்படங்களில் அணிந்தது போன்ற ஆடைகளையும் விற்பனை செய்கிறார்கள். இந்த உலகில் உள்ள அனைவரதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோவொரு சதவீதத்தில் காணப்படக்கூடிய தாழ்வு மனப்பான்மையை inferiority complex ஐ வியாபாரங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்றே சொல்லக் கூடியதாக உள்ளது.
அப்படியென்றால் எல்லோரும் பழைய காலத்திற்குச் சென்று அப்போது இருந்ததைப் போல வாழத் தலைப்படச் சொல்கிறீர்களா?
இல்லை, எமது மன ரீதியான தெரிவாக மடடுமன்றி அறிவார்ந்த ஆடைத்தெரிவுகளுக்காகவும் இதை சொல்ல விளைந்தோம்.
ஆராய்ந்தே செயற்படுவோம்……
நன்றி







No Responses