கற்பனையின் கடைசி நொடி

உயிர் வலியை நிஜத்தில் உணரும் தருணமிது..
உனக்காக நான் எழுதும் கடைசி சாசனம்
உயிரில் கலந்த என்னவனே உடலிருந்து
என் ஜீவனை யாரோ இழுக்கிறார்கள்….
அதனிடையே உன்னை பற்றி நினைக்க கிடைத்த சிறு பொழுது….

உருகி மருகி உயிரில் உனை வைத்து
உன் நினைவினில் உயிர் கரைகிறேன்
எனை நீ காணாயோ நான் இறக்கும் முன்…
மேகங்களுக்கிடையில் மின்னி மறையும்
நட்சத்திரங்களைப் போல் உன் வருகையை
எண்ணிய என் கடைசி நொடி போவதும்
வருவதுமாய் இருக்கிறது…..

புரிதலில் வளர்ந்த நம் காதல் உனக்கு
புரிய வைக்கும் என்றெண்ணினேன்
என் நிலையை இனிமேல் காணேணுனை..
இரக்கம் கொண்டு வாராயோ இரந்து போகும் என்னுடலையாவது காண……
இல்லை உனக்கும் வலிக்கும் இப்பொழுது
ஏனெனில் நீ வேறு நான் வேறல்ல..

காதலியே என்று என் கல்லறையில் நீ
கண்ணீர் மல்கி விடாதே கரைந்தே போய்
விடும் என் தேகம் மோட்சம் பெறாது உயிரும்
உனக்காக நான் காத்திருந்த கடைசி நொடியும் சுகமே..
இதோ முழுதுமாய் போய் கொண்டிருக்கிறது என் ஜீவன்….
பிரிந்து விட்டது உடல்கள் மட்டும் தான் உன் நினைவு என்றும் என்னுள்ளே….
கல்லில் செதுக்கிய எழுத்தாய் இந்த
பிரபஞ்சம் சுத்தும் வரை என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும்….
விடைக் கொடு என்னவனே என் விடுமுறைக்கு…

பா.க்ரிஷானி

Add Comment