ஏரியில குளத்துல எத்தனையோ எருமைகள்
சொந்தமுன்னு குளிக்குதே சொர்க்கம் இது பாருடா
பாரினிலே நீ காணா பல இன்பம்தனை
எம்மூரினிலே காணலாம் விரைந்தோடி வாங்கடா…..
மூச்சி விட கஷ்டமில்ல பார்வைக்கும் துன்பமில்ல
பசும்புல் தரையில படுத்தெழும்ப
மனமேங்குது என்ன சொல்ல…
அன்னம் வந்த வழியினை எண்ணம்
இழுத்துச் செல்லும் இந்த வயல்தனை பாருங்க..
கலங்கமில்லா மண்வாசணை காற்றினிலே வருகுதே
கொஞ்சம் சுவாசிச்சிதான் பாருங்க….
எங்கும் சொந்தம் எவரும் சொந்தம் என்று
வஞ்சமில்லாது பழகும் நல்லிதயங்களைப் பாருங்கள்…
நன்றி நாணயம் என்று வாழும் பெருசுகள்
எதையும் புதுமையாய் காணும் சிறுசுகள்
எண்ணத்திலே அலைமோதிக் கொண்டிருக்கும் இளசுகள்
இதயத்தில் குடும்பம்தனை சுமந்து நிற்கும் தாய் தந்தையர்
என்று எண்ணற்ற மனிதர்கள் இங்கு விந்தையே
நகரம் எத்தனை இன்பம் தந்தாலும்
ஒரு நாளேனும் கிராமத்தில் தங்கி போங்கள்
நல் உணர்வுகளை தாங்கி போங்கள்
வாழும் போதே சொர்கத்தை கண்டு போங்கள்…..
பா.க்ரிஷானி






