மைக்ரோசாப்ட் மொபைல் நிறுவனமானது அதன் முதலாவது Lumia ஸ்மார்ட்போனை, Lumia 535 இரட்டை சிம்முடன்கூடிய Lumia 535 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நவம்பர் 28 முதல் விற்பனைக்கு வரஉள்ளது. இதன் விலை ரூ. 9,199. மைக்ரோசாப்ட் Lumia 535 இரட்டை சிம் ஸ்மார்ட்போன் லுமியாவானது விண்டோஸ் தொலைபேசி 8.1ல் இயங்கும்.
Lumia 535 இரட்டை சிம் ஸ்மார்ட்போன் லுமியாவில் 1GB ரேம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. லூமியா 535 விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு 1905 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது 11 மணி நேர பேட்டரி லைப் மற்றும் 23 நாட்கள் ஸ்டான்ட்பை கொடுக்கும். இதனை microSD அட்டை வழியாக மேலும் (128GB வரை) விஸ்தரிக்கலாம். மற்றைய Lumia கைபேசிகள் போலவே Lumia 535 மற்றும் Lumia 535 இரட்டை சிம் கொண்ட கைப்பேசிகளுக்கும் இலவச OneDrive cloud 15GB கிடைக்கின்றது.
Lumia 535 சிறப்பம்சங்களில் ஒன்றாக Lumia 730 மற்றும் Lumia 735 ஐ நினைவூட்டுவதாக இது 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டமைந்துள்ளது. லூமியா 535 தெளிவாக படமெடுக்க மட்டுமல்லாது ஸ்கைப் அழைப்புகளின் போது தெளிவானஷாட் இன்னும் பெறகூடியதாக இருக்கும். இது எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமராவையும் கொண்டமைந்துள்ளது.
Lumia 535, மற்றைய Lumia கைபேசிகள் போல, சியான், பிரைட் பச்சை, பிரகாசமான ஆரஞ்சு, வெள்ளை, டார்க் க்ரே, மற்றும் கருப்பு நிறங்கள் கிடைக்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது இந்தியாவில் குறிப்பிட்ட சில சலுகைகளை கொல்வனவாளர்களுக்கு அறிவித்துள்ளது- Flipkart மின்னூல் வழியாக ரூ1,500 மதிப்புள்ள மின்புத்தகங்கள்(ebooks), எந்தவொரு ரீசார்ஜிற்கும் ரூ600 மதிப்புள்ள ‘கூடுதல் கட்டணம்’ (மாதத்திற்கு ரூ150 வீதம்) வழங்கப்படும். 6000ரூ தள்ளுபடி விண்டோஸ் தொலைபேசி Jabong app வழியாக கொள்முதல் செய்வோருக்கு.
இவ் ஸ்மார்ட்போனானது ப்ளூடூத் மற்றும் போர்ட்டபிள் வயர்லெஸ் சாதனம் மற்றும் Coloud பேங் போன்ற பாகங்களுடன் இணைக்க முடியும். இது தவிர இந்த நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் ஸ்மார்ட்போன் ஒற்றை சிம் பதிப்பு, மைக்ரோசாப்ட் Lumia 535 ஐ அறிவித்திருந்தது.







