புதிய ஸ்மார்ட் பிரேஸ்லெட்(Cicret Bracelet)
மனித குலத்தின் சிந்தனைக்கு எல்லை இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணம் மற்றுமொரு சாதனம்! ஆம் கிக்ரெட் (Cicret) என்ற பிரெஞ்சு நிறுவனம் புதிய ஸ்மார்ட் பிரேஸ்லெட் ஒன்றினை வடிவமைக்கவுள்ளது.
இச்சாதனமானது ஸ்மார்ட் கையடக்கத் தொலைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும், தோலின் மேற்பரப்பில் திரைபோன்று காட்சிகளை தோற்றுவிக்கக்கூடிய வகையிலும் தயாரிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் கையின்தோலில் மேல் தோன்றும் காட்சித் திரையினை தொடுவதன் மூலம் இச்சாதனத்தை இயக்கக்கூடியதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
Google Glass, Smart-watch போன்ற சாதனங்கள் வந்திருந்தாலும் இவ் Cicret Bracelet கூடிய ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பிரேஸ்லெட் சந்தைக்கு வர இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருக்கவேண்டும்.

Google Glass, SmartWatch போன்ற சாதனங்கள் வந்திருந்தாலும் இவ் Cicret Bracelet கூடிய ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்கம்: P.Thinesh






