பகவத்கீதை வாழ்வின் வழிகாட்டி – 2017

வாழ்தல் என்பது ஒரு கலை, திறன், நுட்பம். அதை முறையாகக் கற்று பயிற்சி செய்வதன் மூலம் செல்வச் செழிப்பும் மன அமைதியும் நிறைந்த வாழ்வை வாழலாம். பகவத்கீதை வாழ்க்கை, வாழ்தல் பற்றிய காலத்தால் அழியாத கோட்பாடுகளை விளக்குகிறது. இவை சாதி, மத இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. தெளிவான சிந்தனையையும், தூய உணர்ச்சியையும், துரிதமான செயலையும் வளர்க்க உதவுகின்றன. இக்கோட்பாடுகளை ஒழுங்கு முறையாகக் கற்று பின்பற்றும் போது வாழ்வில் ஏற்படும் எல்லா சவால்களையும் எதிர்நோக்கும் ஆற்றல் கிட்டுகிறது.

இந்தியாவில் மும்பாய்க்கு அருகில் அமைந்திருக்கும் வேதாந்தக் கல்லூரியில் (Vedanta Academy) பகவத்கீதை ஒழுங்கு முறையாகக் கற்பிக்கப்படுகிறது. உலகம் போற்றும் வேதாந்த தத்துவஞானியும் முகாமைத்துவ குருவுமான சுவாமி பார்த்தசாரதியே இக்கல்லூரியின் ஸ்தாபகர் ஆவர். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வரும் இளைஞர்களும் யுவதிகளும் உபநிடதம், பகவத்கீதை போன்ற வேதாந்த நூல்களை ஒழுங்குமுறையாகக் கற்று வருகின்றனர்.

நிகழ்வுகள்

  1. சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையுமான சுனந்தாஜி பகவத்கீதையின் பதினெட்டாவது அத்தியாயம் பற்றி 2017, பெப்ரவரி 25 ஆந் திகதியிலிருந்து 28 ஆந் திகதிவரை மாலை 6.30 மணியிலிருந்து மாலை 8.00 மணிவரை ஹவ்லொக் வீதி – தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள பௌத்த கலாசார நிலையத்தில் உரையாற்றுவார். இந்நிகழ்வு கணபதிச் செட்டி செல்வநாதன் அறக்கட்டளையின் அனுசரணையில் நடைபெறும்.
  2. சுவாமி பார்த்தசாரதியின் சிஷ்யையான உமையாள்ஜி பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணியிலிருந்து 6.15 வரை ‘Governing Business and Relationships’ எனும் கருப்பொருளில் இல.03. ரிஜ்வே இடம், பம்பலபிட்டியில் கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறார்.

இந்த இரு நிகழ்வுகளுக்கும் அனுமதி இலவசம். அனைவரும் வருக. மேலதிக விபரங்கட்கு: vedanta.sl@gmail.com அல்லது 0779213854

Vedanta Academy Sri Lanka

Add Comment