பூமியில் திடீரென தோன்றிய வெடிப்பால் பீறிட்டு வெளித்தள்ளிய களிமண் சமமாக வட்டமடித்து வெண்விழியாக பரவ, அதன் மையத்தில் ஆழ்துளை பகுதி கருவிழி போல காட்சி அளிக்க, அசல் மனித கண்ணைப் போலவே தோன்றுகிறது இந்த ஆச்சரியம்.
எரிமலை வெடிப்பு என்றால் நெருப்பு பாறை குழம்பை (லார்வா) வெளித்தள்ளும் அது ஆபத்தானது. ஆனால், இங்கு ஏற்பட்டிருப்பது அப்படியல்ல.
பூமிக்குள் உருவான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக, வாயுக்கள் மற்றும் திரவ களிமண் பீறிட்டு வெளியேறியுள்ளது. இது புதை சேற்று எரிமலை என அழைக்கப்படுகிறது.
இது வெடிப்பு ஏற்பட்ட பகுதியை தவிர சுற்றுப்புறத்தை அவ்வளவாக பாதிப்பதில்லை. நிலத்தில் இது போன்ற சீற்றங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நடப்பது இயல்பானதுதான்.
ஆனால், அந்த வெடிப்பு ஏற்பட்ட முடிவுநிலையில் ஒரு கண்ணைப் போல பூமியில் காட்சியளிப்பதுதான் விஷேசமே.
கிழக்கு ரஷ்யாவின் தீவான சாக்ஹாலினில் தான் இந்த புகசேவ்ஸ்கி என்ற புதை சேற்று எரிமலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் ஹெலிகொப்டரிலிருந்து பார்க்கும்போது இது பூமியின் கண்போலவே காட்சியளிக்கிறது என்று இதனை புகைப்படம் எடுத்தவர் கூறியுள்ளார்.
இதன் அருகிலேயே இன்னொரு இதைவிட பெரிய புதை சேற்று எரிமலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அது கண்போல அமையவில்லை. அதனால், அதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்ஹாலின் கமெராமேன் மைகேல் மைகேலோவ் தான் இதை முதன் முதலாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார்.
அவர் பல புதை சேற்று எரிமலை பார்த்திருந்தாலும் இதுபோல பார்த்ததில்லை. இது அரிதாக நிகழ்கிற ஒரு ஆச்சரியமான அற்புதமான இயற்கை வினை என்று கூறுகிறார்.







