‘கூகுள் மேப்ஸ்’இல் இரண்டுபுதிய மேம்படுத்தல்கள் (அப்டடேட்) சேர்க்கப்பட்டுள்ளன. ‘எக்ஸ்ப்ளோர்’ மற்றும் ‘யூர் மேட்ச்’ எனப்படும் இரண்டு மேம்படுத்தல்களை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு மேம்படுத்தல்களும் அண்ட்றோய்ட் செல்லிடப்பேசிகளில் செயற்படும். அதேவேளை, அப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகளுக்கு ‘எக்ஸ்ப்ளோர்’ மட்டுமே செயற்படும்.
எக்ஸ்ப்ளோரில் கூகுள் மேப்ஸில் தேடப்படும் இடங்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் பிற இடங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படம் மற்றும் விளக்கங்களும் பயனாளிக்குத் தெரிவிக்கப்படும். அதிலும் குறிப்பாக விலை குறைந்த இடம், குழந்தைகளுக்கு ஏற்ற இடம் போன்ற தரவுகளும் கொடுக்கப்படும். மேலும், குறிப்பிட்ட இடத்தின் முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் பற்றியும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
‘யூர் மேட்ச்’ மூலம், பலகட்ட தரவுகள் சேமிப்பின் பின்னர் உங்கள் விருப்பத்திற்குரிய இடங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.






