சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். #DarkNeck #RoseWater

என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும். அதிக பணத்தை க்ரீம்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்களில் ப்ளீச்சிங் தன்மை இருக்கிறது. எனவே அந்த பொருட்களைக் கொண்டு தினமும் கழுத்தைப் பராமரித்து வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமையைப் போக்க முடியும்.
ரோஸ் வோட்டர் (rose water) பன்னீருடன் தண்ணீர் பாதியளவு சேர்த்து குளிருட்டியில் ஒரு கொள்கலனில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தண்ணீரை கருமையான உள்ள பகுதியில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவிட்டுக் கழுவிவிடுங்கள். இதனை ஒன்று விட்டு ஒருநாள் செய்து வர நாளடைவில் நிறம் மாறிவிடும்.

கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இல்லாவிடின், தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.






