வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்
வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுக் கொடுங்கள்.
**********
கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும்
ஒரு சில நிஜங்களுடன்
நாம் வாழ்கிற நிஜத்துக்கு பெயர்தான் வாழ்க்கை
**********
வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்…அருகில் சென்று பாருங்கள், அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்…!
**********
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது…”நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று”!
**********
தோல்வியும் துன்பமும் தனியே வருவதில்லை. கூடவே வலிமையையும் அழைத்து வருகிறது.
**********
நன்றாக பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும், சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்!
**********
என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன்.
என் தவறை மற்றவர்களிடம் தயங்காமல் கூறுபவன் துரோகி.







