
ஆலயங்களில் நாம் பிராணிகளை பாதுகாத்து வளர்ப்பதுண்டு. கால்நடைகள், பறவைகள், மயில், கோழி, சேவல் போன்றவை இவற்றில் முக்கியமானவை.
அவைகளுக்கு இருக்கும் சூழல் அபாயங்களில் இருந்தும் மனிதர்களால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் இவை பாதுகாக்கப்படுகின்றன. இவை தக்க முறையில் பராமரிக்கப்படுகின்றன/பராமரிக்கப்பட வேண்டும்.
உணவு, மருத்துவ உதவிகள் போன்றவையும் சரியான வகையில் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் அவற்றின் சுகாதார ரீதியான பராமரிப்பும் மிகவும் அவசியம் ஆகும்.

பசு வதைகள், காளை மாடுகளின் அழிவுகள் போன்ற அவற்றின் மூலம் கூடிய பயனைப் பெற்ற பின் அழித்து விடும் மனித செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக ஆலயங்கள் / கோவில்கள் செயல்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறான அறப்பணிகளுக்கு பக்தர்களும் இயன்ற உதவிகளை செய்யலாம்.






