ஒரு தனி நபரின் ஆரோக்கியமான வாழ்வைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றது. உணவு, உடற்பயிற்சி, உறக்கம் என்பதைப் போலவே அவர் அணியும் உள்ளாடைகளும் ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஆடைகள் விடயத்தில் அக்கறை காட்டும் நாம் உள்ளாடைகள் விடயத்தில் கவனக்குறைவாக இருக்கின்றோம்.
பிரச்சினைகள் வந்தபின் தான் அதை உணர்கின்றோம். உள்ளாடை விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக பெண்கள் உள்ளாடை விடயத்தில் இன்னும் தெளிவாக இருக்கவேண்டும்.
சரியான அளவு உள்ளாடை அணிவதன் அவசியம்……
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கொட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துவதே சிறந்தது. சிந்தடிக் உள்ளாடைகள் அதிக வெப்பம் காரணமாக வியர்க்கும் போது அலர்ஜி, நோய்த்தொற்று என்பவற்றை ஏற்படுத்தும்.
தொடர்ந்து சரியான அளவில்லாத உள்ளாடையை அணியும் போது முதுகு வலி, கழுத்து வலி மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும்.
பெண்களுக்கு உள்ளாடை மிகத் தளர்வாக இருந்தால் மார்பகங்கள் தொய்வுற வாய்ப்புண்டு. மிக இறுக்கமாகவும் உள்ளாடைகளை அணியக்கூடாது. உள்ளாடை மிக இறுக்கமாக இருப்பின் அவற்றை மாற்றுவதே சிறந்தது.
உள்ளாடைகளை எவ்வளவு காலம் வரை பயன்படுத்தலாம்?????
6 மாதங்களிற்கு ஒருமுறை நல்ல பிராண்ட் (Brand) உள்ளாடைகளை வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது. 6 மாதங்களிற்கு மேல் பயன்படுத்தினால் அவற்றின் அளவில் மாறுபாடுகள் இருக்கும்.
உள்ளாடைகளை சாதாரணமாக ஊற வைத்து துவைக்கலாம். அடித்தோ, பிழிந்தோ துவைக்க கூடாது. அவ்வாறு செய்தால் அதன் அளவு மாறி மிகவும் தளர்வாகிவிடும்.
தொய்வான மார்பகங்களை உடையவர்கள் பொருத்தமான உள்ளாடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்து வந்தால் மார்பகங்கள் இறுக்கமாக மாற வாய்ப்புள்ளது. அத்துடன் மார்பிலுள்ள தேவையற்ற கொழுப்பையும் இது கரைக்கும்.
இரவு நேரத்தில் உள்ளாடை அணியலாமா????
அலர்ஜி அல்லது நோய்த்தொற்று உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். ஏனெனில் பகல் முழுவதும் பயன்படுத்திய உள்ளாடையைத் தொடர்ந்து அணிவதால் அது மேலும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
இரவு நேரங்களில் உள்ளாடை அணியாமல் இருப்பது சிறந்தது. இது நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.
சரியான அளவு உள்ளாடைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?????

பெண்கள் உள்ளாடையின் அளவோடு கப் சைஸையும் ( Cup size) தெரிந்து வாங்க வேண்டும்.
A, B, C என மூன்று கப் சைஸ்கள் உள்ளதே பலருக்கு தெரிவதில்லை. இன்னொரு எளிய வழிமுறையானது அளவை நாடா கொண்டு அளந்து பார்த்து வாங்குவது.
முதலில் ஒரு பிராண்ட் உள்ளாடையை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்து அது பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அதே பிராண்டில் வெவ்வேறு நிறங்களில் வாங்கிப் பயன்படுத்தலாம்.






