உணவை எந்த பாத்திரத்தில் சமைக்கலாம்?

எந்த  உணவை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி,  காற்று படாத சமையல் உபகரணங்களில் சமைக்கப்படும் உணவு விஷத்துக்கு சமம். இந்த விஷம் இரண்டு வகைப்படும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு பின்னர் அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணத்திற்கு பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும் பொழுது எந்த விதத்திலும்  காற்று, சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது. இதில் இன்னொரு ஆபத்தான விடயம் என்னவென்றால்,இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது. இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விடயம்.images1

பிரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் விரைவில் மிருதுவாகும். ஆனால், வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு. நம் சரீரத்தில் அனைத்து சக்திகளும் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

உணவு சமைப்பதற்கு உகந்த பாத்திரங்களும் அவற்றில் சமைத்தால் நம் உடலில் சேரும் சத்துக்களின் வீதமும் பின்வருமாறு அமைந்துள்ளது;மண்பாண்டம் – 100%,வெண்கலம் – 97%,பித்தளை – 95% இதுவே அலுமினிய பிரஷர் குக்கரில் சமைத்தால் 7% தொடக்கம் 13% தான் இருக்கும். இதில் சமைத்த உணவு பதார்த்தங்களை  உண்பதன்  மூலம் நீரிழிவு, முழங்கால் வலி, விரைவில் முதுமை போன்ற வியாதிகளுக்கு ஆளாக நேரிடும்.

இது போன்றே குளிர்சாதனப்பெட்டி , மைக்ரோ வேவ் போன்ற காற்று, ஒளி படாத உபகரணங்களில் வைத்து எடுக்கப்படும்   உணவுப் பதார்த்தங்களும் எப்பொழுதும் அபாயமே.

Add Comment