க்ரோம் வழியே இணையதளங்களுக்குள் ஊடுருவும் விளம்பரங்களை தடுக்க கூகுள் முடிவு

இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ப்ரவுசர்களின் (chrome browser) வழியே இணையதளங்களைப் பார்க்கும்போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு எதிர்வரும்  பிப்ரவரி 15ஆம் திகதி  முதல் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் 90 சதவிகித ஸ்மார்ட்போன்கள் கூகுளின் அன்ரோய்ட்  இயங்குதளத்தையே கொண்டுள்ளன. அவை அனைத்திலும் க்ரோம் ப்ரவுசர் உள்ளது. இந்நிலையில், கூகுளின் இந்த விளம்பரக் கட்டுப்பாடு சிறு இணையத்தள நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இது கூகுளின் சர்வாதிகாரப்போக்கு என்ற குற்றச்சாட்டும்  எழுந்துள்ளது. இந்த விளம்பரக்  கட்டுப்பாட்டை குறிப்பிட்ட பயனாளர் தனது  தொலைபேசியில் நிறுத்தி  வைக்கும் அம்சமும் இருக்கும் என்று கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

google - the popular search engine

Add Comment