ஆரோக்கியமான உணவுகளை உண்பது எப்படி?

உணவை உண்ணும்போது மிக வேகமாகவோ மிகவும் மெதுவாகவோ சாப்பிடக்கூடாது.

காய்கறிகளை ஒரு போதும் அதிகளவு எண்ணெய் சேர்த்து வறுக்க கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் விட்டமின், தாதுச்சத்துக்களை போக்கிவிடும்.

முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் ஜீரணமாக மிகவும் தாமதமாகும்.

கோபம், மனவருத்தம் என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிடாதீர்கள்.

எப்பொழுதும் உணவை மிதமான சூட்டில் உண்பது உடலுக்கும் நல்லது, இலகுவில் சமிபாடடையவும் உதவும்.

fresh green vegetables good for your health

Add Comment