ஆற்றோரத்தில் இரு தரைவாழ் நத்தைகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.இவர்கள் புதிய பொருட்களை பார்த்ததும் விளையாட ஆரம்பித்து விடுவர். அப்போது ஆற்றங்கரையில் நன்கு கனிந்த மாம்பழக் கூடையை கண்டனர் .உடனே இருவரும் கூடைக்குள் ஏறி விளையாட ஆரம்பித்தனர். அப்போது திடிரென கூடையை படகில் ஏற்றினர்.இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து நடுங்கினர்.நமது வாழ்விடத்தை விட்டு செல்ல போகிறோமோ என்ற வெறுப்பும், எந்த இடத்துக்கு செல்ல போகிறோமோ என்ற அச்சமும் கொண்டனர்.
பின்னர் எப்படியாவது வெளியே செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது தங்கள் வேறு நண்பர்களை சத்தமிட்டு அழைத்தனர். ஆனால் இவர்கள் சத்தமிட்டது வெளியே கேட்க வில்லை. பின்னர் நத்தையின் கூடுகளால் கூடையை முட்டி மோதி அசைத்து பார்த்தனர். அதுக்கும் வெற்றியளிக்கவில்லை. அடுத்து துடுப்பை கண்டனர் .துடுப்பில் ஏறி வெளியே செல்ல எட்டி பார்த்தனர் ஆனால் துடுப்பின் அடிப்பகுதி நீருக்குள் காணப்பட்டது. இவர்கள் எடுத்த முயற்சிகள் எதுக்கும் வெற்றியளிக்க வில்லை. சிறிது நேரத்துக்குள் படகு புறப்பட ஆயத்தமாகியது.
இருவரும் கடுமையாக யோசித்தனர்.பின்னர் இறுதியாக கனிந்த இரு மாம்பழங்களுக்குள் கொம்பு போன்ற நாக்கினால் வெட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.இதைக்கண்ட மாம்பழத்திற்கு உரிமையாளர் கோபத்துடன் இரண்டு பழங்களையும் வெளியே வீசினர். அந்த பழங்கள் நத்தைகள் வாழ்ந்த பழைய இடத்திலே வந்து விழுந்தனர். பின்னர் இருவரும் சந்தோசமாக விளையாடினர்.
கதையாக்கம்: M.Hemamalini







