விராட் கோலி சதம் அடித்து உலக சாதனை;சச்சினின் இரு சாதனைகளை உடைத்தார்

இந்திய அணியின் தலைவர் #Indian Cricket Team Captain  விராட் கோலி #Virat Kohli தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் சதம் அடித்து, சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் எனும் உலக சாதனையைப் படைத்தார்.

ஒன்பதாயிரம் ஓட்டங்களில் இருந்து பாத்தாயிரம்  ஓட்டங்களைஎட்டுவதற்கு அதாவது ஆயிரம் ஓட்டங்களை எட்டுவதற்கு கோலி 11 இன்னி்ங்ஸ்கள் #Innings மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் #One Day Seriesநடந்து வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, துணைத்  தலைவர் ரோஹித் சர்மா இருவரும் அபாரமாகச் சதம் அடிக்க எட்டு  விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் #Toss வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை #Batting   தேர்வு செய்தது. இரண்டாவது போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியாக முதலாவது போட்டியில் விளையாடிய 12 வீரர்களே எந்தவிதமான மாற்றமுமில்லாமல் அறிவிக்கப்பட்டனர்.

தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இருந்தது. கடந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த ரோஹித் சர்மா இந்த முறை நான்கு  ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரோச் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த அணித் தலைவர்  விராட் கோலி, தவணுடன் இணைந்தார். முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த ஷிகர் தவண் இந்த ஆட்டத்திலும் சொதப்பினார், 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், நர்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார். இதனால், 40 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால், மூன்றாவது  விக்கெட்டுக்கு வந்த ராயுடு, கோலியுடன் இணைந்தார். இருவரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையினை  உயர்த்தினார்கள். அதிரடியாக ஆடிய  விராட் கோலி, ஒருநாள் போட்டியில் தனது 49ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். ராயுடு அரைசதம் அடித்த நிலையில் 73 ஓட்டங்களில் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் 139 ஓட்டங்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விராட் கோலி 81 ஓட்டங்கள் சேர்த்திருந்த போது ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்களை அதிகவேகமாகக் கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் சேர்த்த 1,573 ஓட்டங்களே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களாகும்.ஆனால், இந்த போட்டியில் விராட் கோலி அந்த சாதனையை#Rec முறியடித்து சச்சினை பின்னுக்கு தள்ளினார்.

விராட் கோலி தவிர, திலகரத்னே தில்ஷான், குமார் சங்கக்கார, சனத் ஜெயசூர்ய, மகேல  ஜெயவர்த்தன, ரிக்கி பொண்டிங், காலிஸ், பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக் ஆகியோரும்   பாத்தாயிரம்  ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.

#Century #WorldRecord #BreakSachinRecord

Add Comment