11 ஆயிரம் ஓட்டங்களை கடந்துவிட்டார் மஹேல

ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத் தொடரில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களைக்குவித்த அவர் அதில் 62 ஆவது ஓட்டத்தினைப்பெற்ற போதே 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்தார்.

இதுவரை 394 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல 15 சதம், 69 அரைச்சதம் உட்பட 11,022 ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 3 ஆவது இலங்கை வீரர் மற்றும் 8 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முன்னதாக சச்சின் (18,426), பொண்டிங் (13,704), ஜெயசூர்யா (13,430), இன்சமாம் (11,739), ஜக் கலீஸ் (11,498), கங்குலி (11,363), குமார் சங்ககரா (11,231) ஆகியோர் இந்த இலக்கை எட்டியிருந்தனர்.

Add Comment