ரஷ்யாவில் நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பிரான்சு- குரோஷியா ஆகிய அணிகள் மோதின. அதிரடியாக ஆடிய பிரான்சு அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. முதல் பாதியில் 18ஆவது நிமிடத்தில் குரோஷிய அணியின் மரியோ மன்சுசசிக் சேம்-சைட் கோல் அடித்தார். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி முன்னிலை பெற்றது. போட்டியின் 28ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் கோல் அடிக்க, 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமன் ஆனது.
போட்டியின் இரண்டாம் பாதியில், அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது பிரான்சு அணி. 59ஆவது நிமிடத்தில் போக்பாவும் 65 ஆவது நிமிடத்தில் மபாப்பேவும் அடித்த கோல்களினால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி அதிரடியாக முன்னிலை பெற்றது.
போட்டி முடிவில், குரோஷியா அணி 2 கோல்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சு அணி வெற்றி பெற்றது. மகுடம் சூடிய பிரான்சு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்சு அணி, 20 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






