ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட்டில் போட்டியில் விளையாடும் பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலிக்கு (Virat Kohli) ரூ.12 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதையடுத்து தலைவர் என்ற முறையில் விராட் கோலிக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் தலைவர் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.







