
என்னதான் கொஸ்மட்டிக்ஸ்- செயற்கை அழகு சாதனங்கள் இருந்தாலும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தும் போது சந்தேகமே இல்லாமல் பயன்படுத்த முடிகிறது. #GlowingSkin #Facepack #Mask #Besanflour
செயற்கைப் பொருட்கள் பயன்படுத்தும் போது அவை ஒத்து வராவிட்டால் தோலில் செய்து விட்டு போகும் வடுக்கள் அதிகம். இந்த வகையில் இயற்கையாக ஃபேஸ் பக் அல்லது மாஸ்க் (Face pack/Mask) போடுவதற்கு மூன்று பிரதான அடங்கு பொருட்களைப் பார்க்கலாம்.
1. கடலை மா/ Gram flour / Besan flour
2. பயற்றம் மா /Green gram flour
3. முல்தானி மிட்டி/ Fullers earth/ Clay Powder
இவற்றில் ஏதோ ஒன்றையோ அல்லது கலந்தோ பாவிக்கலாம். முதலில் இவை தோலில் ஒத்துக்கொள்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது.உதாரணமாக சிலருக்கு பயற்றம் மா ஒத்து வராது. ஃபேஸ் பக்கில் இந்த அடங்கு பொருட்கள் ஒரு base போல தொழிற்படும்.
இந்த base ஐ 1 மேசைக்கரண்டி (tables spoon) முதல் 2 மேசைக்கரண்டி வரை உங்களுக்கு வேண்டிய அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து ஒரு பசை அல்லது பேஸ்ட் போல கரைத்து முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடம் வரை உலர விட வேண்டும்.
பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டே மெதுவாக வட்டவடிவில் ஸ்க்ரப் செய்வது போல மெதுவாக கழுவிக் கொள்ள வேண்டும். பேஸ்ட் பூசி உலர விடும் 15 -20 நிமிடங்களும் கதைக்காது, சிரிக்காது அமைதியாக ஒரு இடத்தில் இருப்பது அவசியம் ஆகும்.

இந்த ஃபேஸ் பக்கை, தினமும் செய்வது அவ்வளவு நல்லதல்ல. வாரம் ஒரு முறை செய்வதே நல்லது. வாராந்தம் சீராக இதனைக் கடைப்பிடித்தால் ஒளிரும் உங்கள் அழகு தான். மேலும் இரவில் ஃபேஸ் பக் போடுவது தான் சிறந்தது. வெளியில் செல்லும் பெண்களாக இல்லாவிட்டால் பகலிலும் பாவிக்கலாம்.
உங்கள் முகம் மிக உலர்ந்த சருமம் என்றால் மட்டும் , face pack இட்டு கழுவி, சருமம் லேசாக உலர்ந்ததும்,மிக மென்மையான மொயிச்சரைஸர் (முகத்திற்கு என்று கிடைக்கும்) ஏதாவது ஒரு துளி அளவில் எடுத்து பூசிக் கொள்ளலாம்.
இன்று பலருக்கும் இருக்கும் தொல்லை opened pores-வெளித்தெரியும் சருமத்துளைகள் ஆகும். அப்படி இருப்பவர்கள் தண்ணீர் உடன் உங்களுக்கு பொருந்தும் Toner ஐயும் சில துளிகள் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து பயன்படுத்தலாம். பேக் போட்ட பிறகு வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.






