நீங்கள் கற்றுக் கொடுக்க மறந்த பாடம்

வட அமெரிக்காவில் ஒரு பறவையினம் அழிந்து வந்தது. அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அந்த பறவைக்கு தனியான பாதுகாவலர், தனி உணவு, அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவையினம் பெருகியது. பின்னர் வெளி உலகத்திற்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டன. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை அதனால் எதிரிகளிற்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை. பறவைகள் அழியத்தொடங்கின. ( எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்)

எந்த இனம் அழியக் கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அதுவே அந்த இனம் அழியக் காரணமானது. அதேபோல் தான் நாம், நமக்கு கிடைக்காதவைகளை நம் பிள்ளைகளிற்கு கிடைக்கட்டும் என்று கொடுத்து அழகு பார்க்கிறோம். அவர்களின் அழிவுக்கு வழி வகுக்கின்றோம்.

பூங்காவில் இருக்கும் விலங்கிற்கு வேட்டையாடத் தெரியாது. அதேபோல் தான் அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகளால் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழிவிடுங்கள். நல்லது கெட்டதைத் தானாக கற்றுக்கொள்ளடும். நம் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து விட்டோம், அவர்கள் எப்படி வெளி உலகத்தை சமாளிக்கப் போகின்றார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்றுக்கொடுக்க மறந்த பாடத்தை இந்த சமூகமும் இயற்கையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும். எப்படி எமக்கும் எம்மைப் போன்ற பலருக்கும் கற்றுக்கொடுத்ததோ அதே போல……………..

Add Comment