குடும்பஉறவுகளை வலுப்படுத்து உதவும் புரிந்துணர்வு

புரிந்துணர்வு என்றால் என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்து நடத்தலே! அது எவ்வாறுசாத்தியமாகும்??  ஒருவர் விருப்பை அடுத்தவர் ஏற்றல் அல்லது ஒருவர் விரும்பாததை அடுத்தவர் வெறுத்தல் அதாவது ஒருவர் விருப்புவெறுப்பை மதித்து விட்டுக்கொடுக்கும் எண்ணத்தைப் பேணினால் புரிந்துணர்வு தானாவே வந்துவிடும்.

புரிந்துணர்வு உண்டென்றால் எவரும் எவர் மீதும் எரிந்து விழ வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவரிடையே முரண்பாடுகள் முளைக்காவிட்டால் குடும்பப் பிரிவிற்கு இடமில்லை. அதேவேளை குடும்ப நலம் பற்றி விசாரித்த பின்னர் ஊரெங்கும் பரப்புவோருக்கு உள்வீட்டுச் செய்தியுமில்லை.

எனவே, மகிழ்வான வாழ்வுக்கு குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்.

அன்பு இருந்தால் ஒற்றுமை வரும். ஒற்றுமை இருந்தால் அன்பு வரும். அன்பும் ஒற்றுமையும் இருந்துவிட்டால் வாழ்வில் உச்ச மகிழ்ச்சியை அடைந்துவிடலாம்.

family unity - spent time with your members and be happy understanding each others

Unity comes in love. Love will come if there is unity. If you love and unity, you will be able to achieve the highest happiness in life.

 

Add Comment