அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல,
எதிர்பாராத ஏற்றங்களும், இறக்கங்களும்,
வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை….
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்….
அமைதியான கடல் என்றுமே
திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை…
ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே,
சிறந்த மாலுமியாக வளர்ச்சியடைகிறான்….
திட்டமிட்டு செயல்படுபவனே,
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி,
வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்….







