குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுக்கலாமா?

மினரல் வாட்டர் என்று பரவலாக கிடைக்கப்படும் குடி நீரில் பல்வேறு கனிமங்கள், உப்பு மற்றும் சல்பர் கூறுகள் உள்ளன. பயணங்களின் போது இது ஒரு பாதுகாப்பான குடிநீராக கருதப்படுகிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்கும் பல இடங்களில் இந்த மினரல் வாட்டர் அதிக அளவு பயன்பாட்டில் இருக்கிறது

பெரியவர் முதல் குழந்தைகள் வரை மினரல் வாட்டரை பருகி வருகிறோம். ஆனால், குழந்தைகளுக்கு இந்த நீர் பாதுகாப்பானதா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர ஆராய்ந்து பிறகு கொடுப்பது தான் அவர்களின் நலனை அதிகரிக்கும். சில வகை நீரை குழந்தைகள் குடிப்பதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது. ஆகவே,இதனைப் பற்றிய ஒரு தெளிவு நமக்கு கிடைப்பதால் நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

mineral-water-bottle

எல்லோருக்கும் இருக்கும் பரவலான நம்பிக்கை, குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பது. ஆனால்,இந்தக்  கருத்துக்கு மாறாக, இது குழந்தைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

போத்தலில் சேமித்து வைக்கும் இந்த நீரில் பிளோரைட் உள்ளதாக நம்பப்படுகிறது. பிளோரைட் சேர்க்கப்பட்ட சில உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும், அவர்கள் பயன்படுத்தும் பற்பசையிலும் பிளோரைட் உள்ளது.

ஆனால்,அளவுக்கு மீறிய பிளோரைட் உட்கொள்ளல் பற்களின் எனாமலை பாதிக்கிறது. இதனால் ஈறுகளில் சின்னஞ்சிறியதாய் முளைக்கத் தொடங்கும் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் தோன்றும். சில போத்தலில்  ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் பிளோரைட் அளவு குறிப்பிடப்படாமல் இருக்கும். அத்தகைய தருணங்களில் அது மேலும் அதிகரிக்கலாம்.

போத்தலில்  உள்ள நீரில், நுண் கிருமிகள் ஒழிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால்,இதுவும் உண்மை இல்லை.

குழாயில் இருந்து எடுக்கும் தண்ணீரில் உள்ள ஈயத்தின் அளவை விட இந்த நீரில் ஈயத்தின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கிருமிகளின் தாக்கம் இந்த நீரில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இதனால் இவை குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. போத்தல்  குடிநீரில் யுரேனியம் அளவு அதிகமாக இருக்கும். இது சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
ஆகவே,குழந்தைகளுக்கு பால் மாவுடன் இதனை சேர்க்கும்போது பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இதனைத் தவிர்ப்பது நல்லது.

சில நேரம் பயணங்களின் போது குழந்தைகளுக்கு போத்தலில்  அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நாம் மினரல் வாட்டரை பயன்படுத்துகிறோம். அப்போது சில விஷயத்தை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்…..

உங்கள் குழந்தைக்கு ஆறு மாதத்தை விட குறைவாக இருந்தால் இந்த நீரை கொதிக்க வைத்து ஆற வைத்துக்  கொடுக்கலாம். குடிக்க கொடுப்பதற்கு முன் அந்த நீரை குறைந்தபட்சம் 70 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்க வேண்டும்.

இதன் மூலம் இந்த நீர் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்ற பாதுகாப்புத் தன்மையைப் பெறுகிறது. அதிக வெப்பம் உள்ள இடங்களுக்கு பயணிக்கும்போது உங்கள் குழந்தைக்கு தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும்.

இந்த சமயத்தில் மேலே கூறிய முறையில் கொதிக்க வைத்து ஆற வைத்து தண்ணீர் புகட்டுவதால் இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தண்ணீர் போத்தலின்  லேபிளில் பிளோரைட் அளவை கவனியுங்கள்.

ஒரு லீட்டர்  நீரில் சோடியம் அளவு 200 மில்லிகிராம் அளவை விடக்  குறைவாகவும் சல்பேட் அளவு 250மில்லி கிராமை விட அதிகரிக்காமலும் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்தபின்பயன்படுத்தவும். குழந்தைக்கு பால் மாவில்  கலப்பதற்காக பயன்படுத்தும் நீரை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.

water bottles not good for babies

 

Add Comment