உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும்,
“தான் ஒருவனே மகா கெட்டிக்காரன்,
மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்”
என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்…
அதுபோலவே, துன்பப்படுபவனும்
“தான் ஒருவன் மட்டுமே
உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்”
என்று எண்ணிக் கொள்கிறான்.
ஆனால், இரண்டுமே உண்மையல்ல….
சுகமும், துக்கமும் இரட்டைப்பிறவிகள்.
சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும்.
இன்பமும், துன்பமும்
ஒன்றை விட்டு ஒன்று விலகுவதில்லை.
எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி
நிம்மதிக்கு வேறு வழியில்லை….
-காஞ்சி பெரியவர்






