இது எப்படி இருக்கு….?

நபரொருவர்  பேருந்து  தரிப்பிடத்தில்  பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது பேருந்தும் வந்து சேர்ந்தது. ஆனால், பேருந்து தரிப்பிடத்தில் நிற்காது  தள்ளிப் போய் நின்றது.

காத்துக்கொண்டிருந்த நம்மாளும்  ஓடிப்போய் ஏறிடலாம்னு  ஓடுறார். கிட்ட போகும் போது பேருந்து கிளம்பிருது.latecomer-man-running-to-catch-the-bus

சரி அடுத்த தரிப்பிடத்தில் ஏறிடலாம்னு  ஓடுறார்,

அப்பவும் கிட்ட போகும் போது பேருந்து  மறுபடியும் கிளம்பிருது.

இப்படியே ஓடி ஓடி வீட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டார்.

வந்தவர் வீட்டில் மனைவியிடம்  எல்லா கதையையும் சொல்லிவிட்டு, ‘பேருந்து  பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 20ரூபா மிச்சம்’ என்றார்.

இவரது கதையைக்  கேட்ட மனைவிக்கு   ரொம்ப கோபம்,

‘என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க, பேருந்துக்கு  பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு முச்சக்கர வண்டிக்கு  பின்னால ஓடி வந்திருந்தா  200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு’ கடுப்பானார்….

இதைக் கேட்ட நம்மாளும் கடுமையா  யோசிக்கத் தொடங்கினார்……

Add Comment