யாரவன்… – கவிதை

சிலிர்க்கும் எண்ணங்களில்
துளிர்க்கும் மலராய்…..
வலிக்கும் காயங்களில்
வருடும் மயிலிறகாய்…..
இனிக்கும் தருணங்களில்
இதழில் தேன் சுவையாய்…
அலை போலுயரும் துயரங்களில்
அணைக்கும் கரங்களாய்…
இருப்பானா அவன் யாரடி….

இவள் இன்முகம் பார்த்து அவன்
இன்பம் கொள்வானா..
ஏக்கத்தில் நான் தேடும் போது
தூக்கத்திலும் எனைத்
தேடி வருவானா..
யாருக்கும் அழகனல்ல அவன்
எனக்கு மட்டுமே அழகானவன்..
எத்தனை முறை முகம் பார்பினும்
அமிர்தம் போல் திகட்டாதவன்..

காலைச் சூரியனைப் போல்
இதமானவன்..
காணும் இடத்திலெல்லாம்
கலந்திருக்கும் என்னவன்..
சேரும் நாள் வருமோ அவனை
காணும் காலம் வருமோ…

காலைக் கனவில் தினம் வருவானடி
காதல் லீலை பல புரிவானடி
பேதை மனதை அவன் கலைத்தானடி
போதை அன்பை நெஞ்சில் விதைத்தானடி
கைப்பிடிக்க நேரில் வருவானா இல்லை..
கனவிலேயே ஏங்க விடுவானா..
யாரோடி அவன் யாரவன்….

பா.க்ரிஷானி
அவிசாவளை

kavithai-Krishani Kavitha

#TamilPoem #KathalKavithai #anpu #loving #dreaming #unmaiKathal #expecting

2 Comments

  1. Jafuras 01/12/2018
  2. Thilina Sampath 01/12/2018

Add Comment