கட்டிடங்கள் பல வளர்ந்த, சரிந்த போதிலும்..
வெற்றிடங்களை நிரப்பிய வேல் வார்த்தைகள்..
எக்காலமும் உச்சத்திலிருக்கும் ஆதவனை போல்..
முக்காலமும் திகழும் முத்தமிழ்..
நம் உயிரில் முத்தமிட்டிருக்கும் தமிழ்..
உயிராய் உடலில் புகுந்து
உதிர நாளங்களில் படர்ந்து
உயர்தினையாய் உலகில் உயர்ந்து
உச்சம் தொட்டு அச்சம் அகற்றி
உணர்வினில் கலந்து உறவாடும்
உன்னை என்னை சேர்த்த அன்னைத்தமிழ்…….
குருதியில் கலந்ததால் தமிழ் – எம்
குணத்தின் சிகரத்தில் நிற்குதோ
மனதினிலே மருவியே மரபு வழக்கமதை
மண்ணைத் தொட வைக்குதோ….
அம்மண்ணில் நாம் பிறந்ததால்
நம்மில் வீரம் நிலைத்து நிற்குதோ…
மலையே திரண்டு வந்த போதிலும்
உடல் சிலையாய் அசைய மறுக்குதோ..
கற்கள், புற்கள் தோன்றா காலத்தில்
பூத்த புதுமைத் தமிழே….
ஔவை, வள்ளுவர் பல்லாயிரங் கவிஞர்கள்
போற்றிப் பாடிய பொற்தமிழே…
ஆயிரங்காவியங்கள் தந்த அழகுத்தமிழே…
உனக்கில்லையே ஒருபோதும் அழிவு
அதை உணரமறுத்தவருக்கில்லை உயர்வு…
அனைவரும் வாரீர்
அன்னைத்தமிழைப் போற்ற..
மனமகிழ்வுடன் வாரீர் பிள்ளைத்
தமிழை கொஞ்ச…
விரைந்தோடி வாரீர் வீரத்தமிழை வணங்க…
விலையேதும் இல்லையே எம்
தங்கத்தமிழை வாங்க….
பா.க்ரிஷானி
அவிசாவளை







Superb krishani all the best keep rocking.
மிக்க நன்றி