நீரிழிவு ஒரு நோயே அல்ல! கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்

இன்று பலரையும் பாதிக்கும் பொது நோயாக நீரிழிவு  உருவெடுத்துக் கொண்டுள்ளது. தேநீர்க் கடையில் கூட நடுத்தர வயதினரைக்  கண்டால், கடைக்காரர் ‘சீனி  குறைத்து  போடவேண்டுமா?’ என்ற கேள்வியைக்  கேட்ட பிறகே தேநீர் போடுகின்றார்.அதற்குக்  காரணம், நடுத்தர வயதினர் அதிகமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையே.

பிறந்த குழந்தை முதல் வயோதிபர் வரை  இந்நோய் உள்ளது. இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது.நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்; உங்கள் தாத்தா, பாட்டி நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரைக் கேளுங்கள்,அவர்களுடைய தாத்தா-பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்களா? என்று. அநேகமானவர்களிடத்தே இல்லை என்ற ஒரே பதில் மட்டுமே நமக்குக்  கிடைக்கப்பெறும்.

நிலைமை இவ்வாறிருந்தும் ஏன் இப்படிப் பரப்புகின்றார்கள் என்றால்; இன்றைக்கு நாம், நாளை நம் பிள்ளைகள், அதன்பிறகு பேரப்பிள்ளைகள்,பேரப்பிள்ளை காலத்தில்  இது பரம்பரை நோய் என்றே நம்பப்படும்.நீரிழிவு  என்பது நோயா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
சித்த மருத்துவத்தில் 24 வகையான நீரிழிவு நோய் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவத்தில் மதுமேகம் என்று அழைக்கின்றனர்.(மது என்றால் இனிப்பு என்றும் பொருள்படும்.)

நீரிழிவு  இன்று மரபுப் பழக்கவழக்கங்கள் மாறுபாட்டினால் ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி, வணிக  நிறுவனங்களும் செயற்கையான முறையில் இந்த நோயை உருவாக்குகின்றன என்றும் கூறலாம்.

நீரிழிவு  நோய்க்கு வீட்டு வைத்தியம்


இரண்டு டம்ளர் தண்ணீரில் ஐந்து  நித்யகல்யாணி மலர் இதழ்களை போட்டு அத்துடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.அதாவது,அரை டம்ளராக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து அதனை காலை-மாலை என இருவேளையும்  வெறும் வயிற்றில் அருந்தி வர நீரிழிவு நோய் குறைந்து கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

குறிப்பு: உணவிற்குப் பிறகு நாம் துவர்ப்பு சுவையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் உடல் சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கும். அதற்காகத்தான் நம் முன்னோர்கள் வெற்றிலைப் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.
இன்று நாகரரிகம் என்ற பெயரில் அந்த பழக்கவழக்கம் கைவிடப்பட்டுள்ளதனால் ஏற்பட்ட விளைவில் ஒன்றுதான் இந்த நோய்க்குக்  காரணம். சிறிது கொட்டைப்  பாக்கை உணவிற்குப்  பிறகு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய்  வரும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு.

 

Add Comment