வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளினால் உடல் ஆரோக்கியம் குறையும். இது போன்ற பாதிப்புகளுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மாற்றம் செய்ய வேண்டும். சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.
மலச்சிக்கல் ஏற்பட காரணம்
வயிற்று வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்படும். தினசரி உணவு முறைகளில் மாற்றம், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் நீங்க
குளிர்ச்சித் தன்மையை அளிக்கக் கூடிய தயிர், வயிற்றுச் சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். மேலும், தயிரில் உள்ள கல்சியம், உயிர்ச்சத்து பி-2,உயிர்ச்சத்து 12, பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானவை.எனவே, பழங்கள்,தானியங்கள் ஆகியவற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.






