வாழ்வில் நாம் சந்திக்கும்
ஒவ்வொரு துன்பமும்
எதிர்காலத்தில்
நாம் அனுபவிக்க இருக்கும்
இனிமையான பொழுதுகளின் ஆரம்பமே..
நீ சிந்தும் கண்ணீர்
உன் வருங்கால பாதையை
தெளிவாக காண விடாத
தடைக்கல்.
ஆதலால்,
உன் கண்ணீரின் பெறுமதி அறியடா
ஈரமில்லா நெஞ்சத்தை நினைத்து
உன் கனவுகளை
சிதைத்து விடாதே..
எதிர்கொள்
முகம் கொடு
என்றும் ஓர் புன்னகையுடன்.
தடையும்
தயங்கும்
உன்னை நெருங்க..!!!
k.ராம்






