ஒருசமயம் வேற்றுநாட்டு வேந்தன் ஒருவன் மாசிடோனியா மீது படையெடுத்தான். இந்தப் போரில் மாசிடோனியமன்னனாகிய மாவீரன் அலெக்ஸாண்டர் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். அதன் விளைவாகத் தனக்கு நம்பிக்கையான 1000 போர்வீரர்களுடன் தப்பிச்சென்று ஒரு தீவினுள் ஒளிந்துகொண்டான். அவனுடைய மீதிப்படை அந்நிய மன்னனால் கைப்பற்றப்பட்டது. வேற்றுமன்னனுக்கோ
மாவீரன் அலெக்ஸாண்டரைக் கொன்று தன்பெயரையும் சரித்திரத்தில் இடம்பெறச் செய்யவேண்டுமென்ற அவா; அலெக்ஸாண்டருக்கோ
தன்னுடைய அரியாசனத்தை மீண்டும் கைப்பற்றவேண்டுமென்ற வெறி. இந்நிலையில் அலெக்ஸாண்டரின் மறைவிடத்தைத் தன்
உளவாளிகள் மூலம் அறிந்த அந்த வேற்றுநாட்டுவேந்தன், தான் கைப்பற்றிய லட்சக்கணக்கான மாசிடோனியப்படையையே கொண்டு ஒரு
சேனை அமைத்தான்( அந்நாட்களில் வேற்றுமன்னனால் கைப்பற்றப்பட்ட சேனைகள் அம்மன்னனையே தலைவனாக ஏற்றுக்கொள்வது
கிரேக்கர்களின் வழக்கமாகும்) .அந்த சேனைக்குத் தன்னுடைய தளபதியையே தலைமைப்பதவியில் அமர்த்தினான். இம்மாபெரும்
சேனையை அலெக்ஸாண்டருடன் போர்தொடுத்து அவனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும்படி உத்தரவிட்டு அனுப்பினான்.
இதை அறிந்துகொண்ட அலெக்சாண்டரும் தன்னிடமிருந்த 1000பேரையும் அணிதிரட்டி அவர்கள்முன் தன்னுடைய வெள்ளைக்குதிரை
“பியூசிபலஸ்”ஸில் அமர்ந்து வழிநடத்திச் சென்றான். இடைவழியில் இரு படைகளும் சந்தித்துக்கொண்டன. வரலாற்றில்
இடம்பெறவிருந்த யுத்தம் தொடங்க இன்னும் சிறிதுநேரமே இருந்தது. எதிரில் நின்ற லட்சக்கணக்கான வீரர்களையும், தன்னுடன் வந்த
வெறும் 1000பேரையும் பார்த்தான் அலெக்ஸாண்டர். இப்போது யுத்தம் செய்வது தற்கொலைக்குச் சமம் என்று புரிந்தது. யோசித்தான்…
பின்னர் தன்னுடைய படையிடம் இவ்வாறு கூறினான்…” நான் சென்று திரும்பும்வரை இங்கேயே காத்திருங்கள். அங்கே என்ன
நடந்தாலும் யாரும் பதற்றமடையாமல் இங்கேயே நிற்கவேண்டும்”. இவ்வறு கூறிவிட்டுத் தன் குதிரையைக்கிளப்பிக்கொண்டு
தன்னந்தனியாக எதிர்நாட்டுப்படைநோக்கிப் பயணித்தான் இம்மாவீரன். “எம்மைப் பார்த்துப்பயந்து உயிர்ப்பிச்சை கேட்கவருகிறான்”
என்று தனக்குத்தானே வியாக்யானம் பண்ணிக்கொண்டு இறுமாப்பில் சிரித்தான் அந்தத் தளபதி. இருந்தாலும் அவன் தனித்து
வருவதால் யாரும் அவனைத்தாக்க முனையவில்லை. படைமத்திக்குள் புகுந்தான் அலெக்ஸாண்டர். அவர்கள் அனைவரையும்
பார்த்துத் தன் கணீர்க்குரலில் பேச ஆரம்பித்தான்… “நான் உங்கள் பழைய அரசன் வந்திருக்கிறேன். உங்களில் யாருக்கேனும் என்மீது
ஏதாவது கோபங்கள் இருந்தால் என்னை இங்கேயே கொன்றுவிடுங்கள்.” என்று கூறிவிட்டு சுற்றிப்பார்த்தான். யாரும் அசையவில்லை.
தொடர்ந்தான்…”…அப்படியெதுவும் இல்லையெனில் உடனடியாக அணிதிரண்டு என்பின்னால் வாருங்கள். எம் தாய்மண் எமக்காய்க்
காத்திருக்கிறது.” என்று முடித்துவிட்டுத் தன் குதிரையில் தன்னுடன்வந்த 1000 பேர்நோக்கிக் கிளம்பினான். ஏதோ மந்திரத்தில்
கட்டுண்டவர்கள்போல அந்த லட்சக்கணக்கான மாசிடோனியப்படையினரும் அவன் பின்னால் சென்றனர். தளபதி திகைத்துநின்றான்.
அந்தப் படையைக்கொண்டு மாசிடோனியமண்ணை அலெக்ஸாண்டர் மீட்டெடுத்தான் என்பது மீதிக்கதை. அலெக்ஸாண்டர் மாவீரன்
மட்டுமல்ல…மாபெரும் இராஜதந்திரி என்பதற்கும் இச்சம்பவம் நிரூபணம்…..;-)
அலெக்ஸாண்டர் மாவீரன் மட்டுமல்ல மாபெரும் இராஜதந்திரி
14 years ago
1 Comment







Hi there i am kavin, its my first time to
commenting anywhere, when i read this piece of writing i thought i could
also make comment due to this sensible piece
of writing.