பகுதி 7 – சினிமா, சீரியல், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர கலாசார நிகழ்வுகள் வியாபார நோக்கம் கொண்டவை.
இன்று பலருக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது. இது வரமா சாபமா என்றொரு விவாதமே நடத்த முடியும். அது நிற்க.
நாடகங்கள், சங்கீத நிகழ்ச்சிகள், கொண்டாட்ட நிகழ்வுகள் போன்ற இந்த நிகழ்வுகள் எல்லாம் வியாபார நோக்கம் கொண்டவை. இந்த நிகழ்வுகள் எத்தனை பேர்களைச் சென்றடைகின்றனவோ அவ்வளவுக்கு அவற்றின் வியாபாரம் வளர்கிறது எனலாம்.
சினிமா உட்பட, இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பெரும் வியாபார நிறுவனங்களின் பங்களிப்பிலேயே நடக்கின்றன. பெரும்பாலும், இந்த ஸ்பொன்ஸர் நிறுவனங்களின் தயவிலேயே நடிகர்கள், தொகுப்பாளர்கள், பங்கு பெறும் கலைஞர்கள் எல்லோருக்கும் ஆடைகள் வழங்கப்படுகின்றன. அதாவது அதிக மக்களை கவர வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்தது போல, இந்த நிகழ்வில் இவர் அணிந்தது போல எமக்கும் வேண்டும் என்றெல்லாம் அங்கலாய்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் முன்னே சொன்னது போல fashion அல்லது trend setting என்பதற்கும் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு. ஆகவே, நாம் பார்க்கலாம், ரசிக்கலாம். கொள்வனவு செய்யும் போது மட்டும் இவ்விதமான trends எம்மையே ஆளாமல், புத்தி சாதுரியமாக தெரிவு செய்யலாம்.
சிந்திப்போம்…செயற்படுவோம்….
நன்றி
பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு
பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்
பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி
பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்







No Responses