😀 பகுதி 1- அறிமுகம்
ஒருகாலத்தில் ஆடைகள் மானம் காப்பவையாக மட்டுமே இருந்தன. எமது சமூகம் என்று பார்த்தால் பழங்காலத்தில் ஆடைகளில் பெருமையையும் கண்டிருந்தனர்; பேதமையையும் ஏற்படுத்தியிருந்தனர்.
இன்றைய காலத்தைப் பார்த்தால், ஆடைகளின் வகைகள், வடிவமைப்புகள், துணி வகைகள் எல்லாம் ஓர் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. ஆடைகள் வடிவமைப்பு ஓர் பட்டப்படிப்பாக மாறும் அளவிற்கு காலம் மிக நன்றாகவே மாறியிருக்கிறது. துணிகள் வடிவமைப்பு தொழிநுட்பம் ஒரு பொறியியல் துறையாக வளர்ந்து உள்ளது, நல்லது.
இந்த நன்மைகளையெல்லாம் நாம் சிறிது சிந்தித்து அனுபவிப்பது சிறந்தது என்று எண்ணம் தோன்றுகிறது. இப்படி சொல்லும் போது ஒரு பழமை வாதியின் கருத்து போலும் என்று நினைக்கத் தோன்றுகிறதா அல்லது பெண்களின் ஆடைகளைப் பற்றி விமர்சிக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறதா அல்லது என்ன புதிதாய் எதனை சொல்லிவிடப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா அப்படியானால் நீங்களே தான் இப்பகுதியின் சிறந்த வாசகராய் இருக்க முடியும்.

நாம் ஏன் ஆடைகளைத் தெரிந்து வாங்க வேண்டும், ஏன் ஆடைகளைத் தெரிந்து அணிய வேண்டும் என்று சில காரணங்களை முன்வைக்க இருக்கிறோம். இந்த காரணங்கள் விமர்சிப்பது போலவே தோன்றினாலும், இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்ற நோக்கில் தொடர் ஆக்கங்களாக தருகின்றோம்.
இதில் உள்ள நிறை குறைகளை comments இல் பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்துக்களையும் நாம் வரவேற்க தயாராக இருக்கிறோம்.
நன்றி






No Responses