அந்தமே ஆரம்பம் – கவிதை

இன்னலின் இடுக்கில்
ஒடுங்கி விடாதே…
இடையூறு கண்டு
பயந்து விடாதே…
துன்பத்தைக் கண்டு
துவண்டு விடாதே…
தீயவை கண்டு
ஒதுங்கி விடாதே…
தடைகளை தகத்தெறி
தானாக மார்க்கமுண்டாகும்..
ஒன்றின் அந்தமே…
பிரிதொன்றின் ஆரம்பம்…
மறவாதே மனிதா பூமிக்கும்
சாமிக்கும் துன்பம் புதிதா…

பா.க்ரிஷானி

One Response

  1. Jafuras 23/12/2018

Add Comment