இங்கே நாம் பார்ப்பது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 2018 மார்கழி 17இல், மதியம் இரண்டு மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இதைப் பார்க்கும் உங்களுக்கு என்ன புலனாகிறது?

உடனேயே சொல்லிவிடுவீர்களா, குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முறையாக கவனம் செலுத்தவில்லை என்று? ஆங்காங்கே குப்பைகளை இவ்விதம் அகற்றுங்கள் எனும் பதாதைகளோடு குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் நமது மேம்பட்ட அலட்சியம் தான் இவ்வாறான வகைகளில் குப்பைகளை அங்கங்கே முறையற்ற வகையில் எறிந்து விடும் செயற்பாட்டிற்கு காரணமாகும்.
ஏதோ அங்கங்கே கொஞ்சம் குப்பைகள் #garbage சிதறியிருக்கின்றன,அவ்வளவு தானே, இதற்கு போய் என்ன இவ்வளவு அளப்பறை? இப்படிக் கேட்பவர்களா நீங்கள்? இதற்கு பதில்- சிறு துளி பெருவெள்ளம்.
இது நல்ல செயல்களாகட்டும் தவிர்க்க வேண்டிய செயல்களாகட்டும் ஒரு சிறு செயல் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சரி, நாம் எவ்வகையான செயற்பாடுகளை செய்யப் போகிறோம்?
துப்பரவுப்பணியாளர்கள் தத்தமது வேலைகளை சரியாகத்தான் செய்கிறார்கள்; ஆனால், நாம் தான், இதற்குத் தானே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற மமதையில் நமது செயல்களின் விளைவுகளைக் கவனிக்கத் தவறுகிறோம். இதைவிடவும் அதிகமாக முறையற்று அகற்றப்பட்டுள்ள குப்பைகளைக் கடந்து நாம் சென்று வருகிறோம் அல்லவா?
இது ஒரு சிறிய உதாரணமே. இவ்வாறு முறையற்று நாம் நடந்து கொள்ளும் செயல்கள் ஏராளம். அரசையோ அதிகாரிகளையோ நாம் குறைகூறிக் கொண்டிருப்பதற்கு முன்னர், நாம் திருந்துவதற்கு நிறைய இடமுண்டு என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாகும்.# Littering





