1) நேரம் தவறாமை மிக முக்கியம்.
2) சிறியவர்களின் கருத்துக்களிற்கும் மதிப்பளிக்க வேண்டும், சில சமயங்களில் அவர்களின் யோசனைகூட நமக்குப் பயன்படும்.
3) அதிகாலையில் விழித்தெழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
4) சோர்வு, சோம்பல் கூடாது.
5) திட்டமிடுதல் மிக முக்கியம். எந்த செயலையும் திட்டமிடாமல் செய்தால் அது முழுமை பெறாது.
6) எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கு காரணம். எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
7) நாளை என்று எதனையும் தள்ளிப் போடாமல் அன்றே அப்பொழுதே அதைச் செய்ய வேண்டும்.
8) முடிவெடுக்க முன் பலமுறை சிந்திக்க வேண்டும். முடிவெடுத்த பின் தயக்கம் கூடாது.
9) தன் வேலைகளைத் தானே செய்ய வேண்டும். எதற்கும் அடுத்தவரையே நம்பி இருக்கக் கூடாது.
10) வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
11) பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.







