பொன்மொழிகள் – நீ ஒன்பது முறை எழுந்தவன்

வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாதீர்கள்
வாழும் வாழ்க்கைக்கு உங்களை விரும்ப கற்றுக் கொடுங்கள்.

**********

கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும்
ஒரு சில நிஜங்களுடன்
நாம் வாழ்கிற நிஜத்துக்கு பெயர்தான் வாழ்க்கை

**********

வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலதான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்…அருகில் சென்று பாருங்கள், அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்…!

**********

பத்தாவது முறையாக கீழே விழுந்தவனை பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது…”நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று”!

**********

தோல்வியும் துன்பமும் தனியே வருவதில்லை. கூடவே வலிமையையும் அழைத்து வருகிறது.

**********

நன்றாக பழகும் அனைவரும் நம் ‪‎நண்பர்கள்‬ இல்லையென்ற சிறு ‪‎தெளிவு‬ இருந்தால் போதும், சில ‪துரோகங்களையும்‬ பல ‪ஏமாற்றங்களையும்‬ தவிர்க்கலாம்!

**********

என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன்.
என் தவறை மற்றவர்களிடம் தயங்காமல் கூறுபவன் துரோகி.

you can try and win

நல்ல பொன்மொழிகளை தெரிந்துகொள்ள www.quotes.oruthuli.com செல்லுங்கள்.

Add Comment