புற்றுநோயைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களால் முடியுமா?

மனிதர்களின் உடலில் ’புராஸ்ட்டேட் சுரப்பி’ அல்லது முன்னிற்கும் சுரப்பி என்னும் பகுதி சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் (urethra) தொடங்கும் இடத்தருகே உள்ளது.

இது சற்று வலுவான சுரப்பித் தன்மையும், நார்த் தசைத் தன்மையும் கொண்டதாகும். 5 செ.மீட்டர் குறுக்களவு கொண்ட இந்த உறுப்பின் எடை, 8 கிராம் மட்டுமே.

வயது முதிரும் நிலையில் இச்சுரப்பி பெரிதடைகின்றது. இதனால் சிறுநீர் கழித்தலில் தடைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமின்றி புராஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

விரைவாக வளரும் முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு அதிகம் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவரின் சிறுநீரை மருத்துவ துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை ஏவி முகர்ந்துப் பார்க்க வைப்பதன் மூலமாகவே, அந்நபருக்கு ‘புராஸ்ட்டேட் கேன்சர்’ உள்ளதா? என்பதை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சி, தற்போது முக்கிய திருப்புமுனை நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ ஆய்வு தொடர்பான அறிக்கை ஒன்றினை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவ வல்லுனர்களில் சரிபாதி பேர் இது தொடர்பாக அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு, போதைப்பொருள் ஆகியவற்றின் வாசனையை முதலில் பழகி அறிந்த மோப்ப நாய்கள், பின்னர் ஏவி விடப்படும்போது, இப்பொருட்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சரியாக கண்டுபிடித்து விடும். ஆனால், புற்று நோய்க்கென தனிப்பட்ட வாசம் ஏதுமில்லை.

Cancer-sniffing-dog

கதிர்வீச்சியல் நிபுணர் ஒருவர், நோயாளியின் உடலில் இருக்கும் புற்றுக் கட்டியை சரியாக கண்டுபிடிக்காமல் தவறு செய்து விட்டால் அவர் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு கோரலாம்.

இந்நிலையில், மோப்ப நாய்கள் தவறான முடிவை தந்தால், யார் மீது வழக்கு போட்டு, யாரிடம் இழப்பீடு கோருவது? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Add Comment