இது ஒரு இளங்காலைப் பொழுது … உறக்கத்தில் இருந்து எழுந்த எனக்கு உடனே தோன்றுவது அன்றைய அலுவலக சிந்தனை .நான் அலுவலகத்திக்கு புறப்படவேண்டும் …
அப்போது அன்றைய நாளிதழ் என் கண்ணில் அகப்படுகின்றது .நாளிதழை பார்த்த எனக்கு பேரதிர்ச்சி !!!!!!……
கடவுளே இது என்ன ????
எனது பெயர் அன்றைய மரண அறிவித்தல் பக்கத்தில்……!!!!
இங்கு நடப்பது என்ன??? எனது பெயர் ஏன் இந்தப் பக்கத்தில் ……?
எனது மூளை சிறிது நேரம் சிந்தித்தது …… ஆம் ….! நேற்றிரவு நான் உறங்கசென்றபோது எனது மார்பு வலித்ததை உணர்ந்தேன் …..
ஓ ………அதன் பின் என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ….அங்கேயே நான் நிரந்தரமாக உறங்கி விட்டேன் போலிருக்கிறது …..
இப்பொழுது நேரம் காலை பத்து மணி …இன்று நான் அழுவலகத்திட்கு நேரம் தவறி செல்லபோகிறேன் ……மேலதிகாரி என்மேல் இடி போல் விழப்போகின்றார் .
ஆனால் எங்கே எனது குடும்பத்தார் ??
அந்நேரத்தில், எனது அறைக்கு வெளியே பலர் நிற்பதுபோல் உணர்கிறேன் …அவர்களில் சிலர் அழுவது என்காதில் விழுந்தது…..ஏன் அழுகிறார்கள் ?? யாவும் புரியாத புதிராக வெளியே வருகிறேன் ……
எனது உயிரற்ற உடலை அங்கெ காண்கிறேன் …..
அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றேன் …எனினும் சுதாகரித்துக்கொண்டு ,”நான் இங்கு தான் நிற்கின்றேன்” என அவர்களை நோக்கி கத்துகின்றேன் …..
ஆனாலும் என்னையோ எனது கதறலையோ அவர்கள் அவதானித்ததாக தெரியவில்லை ….,,
நான் இறந்து விட்டேனா …….???? என்னை நானே வினவுகிறேன் ….
எனது மனைவி எங்கே ?? எனது குழந்தைகள் எங்கே ….?
எனது மனைவி பக்கத்துக்கு அறையில் கண்ணீருடன் இருப்பது தெரிகிறது ….. அவளின் முகம் முழுவதும் சோகத்தின் ரேகைகள் …….
எனது உலகை அறியாத சிறிய மகன் அழுகிறான் தன் தாயின் வாடிய முகம் கண்டு …..
நான் பார்த்ததில் மிகவும் அழகான பெண்ணும் என்னை என்னைவிட அளவுக்கதிகமாகவும் நேசித்தது அவள் தான் என்பதை அவளிடம் கூறாமல் எப்படி நான் இவ்வுலகை விட்டுச் செல்ல முடியும் …….???
எனது குழந்தைகளிடம் நான் அளவு கடந்த அன்பு,அக்கறை ,பரிவு வைத்துளேன் என்பதை கூறாமல் எப்படி இவ்வுலகை விட்டு நான் செல்ல முடியும் ……???
எனது நண்பர்களிடம் அவர்கள் இல்லாவிடில் இவ்வுலகில் பலதவறுகளை நான் இழைத்திருப்பேன் என்பதை கூறாமல் எப்படி நான் செல்லமுடியும் …..???
ஓ …..அங்கு வருபவன் என் உற்ற நண்பன் சில மனதாபங்களினால் எமது உறவு அறுபட்டு போனது …அவனிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்….
ஆனாலும் நான் யார் கண்ணுக்கும் தெரியவும் இல்லை ,எனது கதறல் யாருக்கும் கேட்கவும் இல்லை …..
மீண்டும் என்னை வினவுகிறேன் நான் உண்மையிலேயெ இறந்து விட்டேனா …???
எனது உடலுக்கு அருகில் அமர்கிறேன் ,எனது கண்ணிலும் கண்ணீர் துளிகள் ….
கடவுளை வேண்டுகிறேன் ………
கடவுளே!! ……… எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா ……????
எனது மனைவி,பிள்ளைகள் ,நண்பர்கள் அனைவருக்கும் நான் அவர்கள் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பதை நிருபிக்க வேண்டும் ……
எனது மனைவி அவ்விடம் வருவது தெரிந்தது …
அவளிடம் சொல்ல ஆசைப்படுகின்றேன்…….
“இவ்வுலகில் நீ ஒருத்தியாக இருக்கலாம் ஆனால் எனக்கு என் உலகமே நீதான் !!!”
கடவுளே எனக்கு ஏன் இந்த நிலை ..?? நான் அலறுகிறேன் …….
எனக்கு பிறிதொரு வாய்ப்பு வேண்டும் இறைவா ……..
எனது குழந்தையை கட்டி அணைப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு……….
எனது மனைவியிடம் எனது வாழ்கையில் துணையாக என்னுடன் என்றுமே இருப்பதற்கு நன்றி சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு …….
நான் கதறுகிறேன் ……..
கடவுளே..! எனக்கு வேண்டும் பிறிதொரு வாய்ப்பு ……..!!!!
கடவுளே யாவருக்கும் எனது நன்றிக்கடனை செய்வதற்கு எனக்கு வேண்டும் பிறிதொரு வாய்ப்பு ………!!
ஏன் கத்துகிறீர்கள் ? ஏதேனும் பயங்கர கனவா? என என் மனைவி என்னை எழுப்புவதை உணர்ந்து கட்டிலில் இருந்து எழுகிறேன்.
ஆ ……ஒரு நிம்மதி பெருமூச்சு ……!!! இது வெறும் கனவு …!
எனது மனைவியை இறுக அணைத்து இந்த பிரபஞ்சத்தில் மிகவும் அக்கறையானவள் ,.அழகானவள் நீதான்.நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என அவள் காதில் கூறுகிறேன் ….
நன்றி கடவுளே ….!! எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு ..!!!!
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் நாம் இன்னும் எதனையும் இழக்கவில்லை என்று …இன்னும் தாமதம் வேண்டாம் ….
உங்களுடைய கர்வத்தை விட்டெறியுங்கள் ….
கடந்த காலம் என்பது கடந்து விட்டது .நிகழ்காலத்தில் வாழுங்கள் .எதிர்காலத்தைப் பற்றி சிறிது சிந்தியுங்கள் ….
அடுத்தவர்மேல் உள்ள பாசத்தை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள் .கோபம் தணியுங்கள் ….
எல்லோரிடமும் அன்பாக இருங்கள் …
எப்பொழுதுமே முகத்தில் புன்னகை அணியுங்கள் …
வாழ்க்கை என்பது மிகவும் சிறியது அதை அர்த்தமுள்ளதாக்குங்கள் …..!!!
[button-green url=”#” target=”_self” position=”left”]Kelvin Castelino என்பவரால் எழுதப்பட்ட ” one more chance please” என்ற கதையின் தமிழ் பிரதியாகமே இந்த கதை.[/button-green]
பிரதியாக்கம் –சுயோதமி யோகநாதன்






