வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விடயமாக இருந்தாலும் அதைக் கவனிக்காமல் விட்டால் அல்லது அடிக்கடி வந்தால் பிரச்சினை பெரிதாக மாறி விடும்.மன அழுத்தம், பக்டீரியா, வைரஸ் இவற்றாலும் வாய்ப்புண் உண்டாகிறது.
மேலும், உயிர்ச்சத்து B குறைவாலும் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது.புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும்.
வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.
ஆண்களை விடப் பெண்களுக்கே இந்த தொல்லை அதிகம்.ஏனெனில், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஓர்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
இதனை எவ்வாறு தடுப்பது ?
உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.சமிபாட்டுக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் என்பன ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.
நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில் போட்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் மாறும்.மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம்.கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய் கொப்பளிக்க புண் ஆறும்.பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.






