தற்போதெல்லாம் விசைப்பலகை (Keyboard), சுட்டி(Mouse) ஆகிய எதுவுமே இல்லாமால் கணினி, மடிக்கணினி, செல்லிடத்து பேசி ஆகியவற்றை தொடுதிரை என்ற வசதிமூலம் இயக்கி பயன்படுத்தமுடியும் என்ற நிலையுள்ளது இந்த தொடுதிரை வசதியானது Resistive , Capacitive ஆகிய இரண்டு வழிகளில் செயல்படுகின்றது
Resistiveதொடுதிரை வசதி
இந்த முதல் வகையில் மின்விசையை கடத்தும் பொருட்கள் இரண்டு அடுக்காக இடையில் வெற்றிடமான இடம் விடப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும் நம்முடைய விரலால் அல்லது ஏதேனுமொரு பொருளால் இந்த முதல் அடுக்கினை தொட்டவுடன் அது இரண்டாவது அடுக்குக்கு மின்விசையை கடத்தும் பொருளை தொட்டு மின்சார சுற்று முழுமை பெறுகின்றது உடன் தொடுதிரையானது எத்தனையாவது நெடுவரிசையின் எத்தனையாவது கிடைவரிசை பெட்டி தொடப்பட்டது என்ற தகவலை கணினிக்கு அளிக்கும் உடன் தொடர்புடைய கட்டளை செயற்படுத்தபடும்
இந்த Resistiveஆனது Positives of Resistive , Negatives to Resistive என மேலும் இருவகைபடும் இந்த Positives of Resistive என்ற முதல்வகையானது மிகவிலை மலிவானது gloves, stylus அல்லது pointing ஆகிய சாதனங்களை பயன்படுத்தி தொடுவதன்மூலம் இதனை செயல்படுத்தலாம்
இந்த Negatives to Resistive என்ற இரண்டாவது வகையானது ஒருசமயத்தில் ஒருவிரலை மட்டும் பயன்படுத்தி ஒரேயொரு புள்ளியை தொடுவதை மட்டுமே உணர்ந்திடுமாறு அமைந்துள்ளது மேலும் இது மென்மையானதன்று இதிலிருந்த பதில்செயல் எதுவும் உடன்எதிர்பார்க்கமுடியாது மற்ற தொடுதிரைபோன்று நீண்டநாட்கள் இதுபயன்படும் என உறுதிகூறமுடியாது.
Capacitive தொடுதிரை வசதி
இந்த இரண்டாவது வகையில் திரையில் நான்குமுனையிலும் மிகச்சிறிய அளவில் மின்னோட்டம் இருந்து கொண்டிருக்கும் விரல் அல்லது வேறு சுட்டும் பொருளால் திரையை தொட்டவுடன் மின்சுற்று தடைபட்டு மின்னோட்ட அளவு குறிப்பிட்ட புள்ளியில் வீழ்ச்சியடைகின்றது உடன் sensors register ஆனது இதனை உணர்ந்து கணினிக்கு முன்புகூறியவாறு தகவல் அளிக்கின்றது
இந்த Capacitiveஆனது Positives of Capacitive , Negatives of Capacitive என மேலும் இருவகைபடும்
Positives of Capacitive என்ற முதலாவது வகையில் இயற்கையான தொடுதலுக்கே மிகஅதிக பதில்செயல் கிடைக்கின்றது மேலும் இதுஒன்றுக்குமேற்பட்ட தொடுபுள்ளிகளை உணர்ந்திடுமாறு அமைக்கபட்டுள்ளது அதிக திறனுடைய பிரதிபலிக்கும தன்மை இதில் கிடைக்கின்றது.Negatives of Capacitive என்ற இரண்டாவது ஆனது சிறப்பு தன்மையுள்ள உறையை அணிந்த விரல் அல்லது சுட்டும் பொருள் மூலம் இந்த திரையை தொட்டால் இது கண்டு கொள்ளாது இது அதிக செலவு பிடிக்க கூடியாதாக உள்ளது இவைகளுள் நம்முடைய தேவைக்கேற்றதை நாம் பயன்படுத்தி கொள்ளமுடியும்.
எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் தொடுதிரை வசதி கொண்டதா? என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும், மொபைல்களையும் வாங்குவதை விட அதை சரியாக பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது. எத்தனை தான் துல்லியமான தொடுதிரை தொழில் நுட்ப வசதிகள் இருப்பினும், தூசி படிந்து இருக்கும் தொடுதிரையில் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது. இதனால் மொபைல் திரையை சுத்தம் செய்து வைத்து கொள்வது மிக அவசியம்.
வீட்டிலேயே எளிதாக தொடுதிரையை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு மிருதுவான மைக்ரோஃபைப்ர் அல்லது சிறிய பஞ்சில் கூட எளிதாக மொபைல் திரைகளை சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்ய துவங்குவதற்கும் முன்பு மொபைலை switch-off செய்வது மிக அவசியம் .
மைக்ரோஃபைபர் துணியை வறண்டிருக்கும் நிலையில் பயன்படுத்த வேண்டும். இந்த துணியின் மூலம் தொடுதிரையின் ஓரப்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த மிருதுவான துணியால் சுத்தம் செய்யும் போது, வட்டமான வடிவத்தில் கட்டைவிரல் கொண்டு மெதுவாக முதலில் தேய்க்க வேண்டும். இப்படி சுத்தம் செய்வதால் மொபைல் திரைகளில் கீறள்கள் ஏற்படாது.
தொடுதிரையை சுத்தம் செய்வதற்காகவே பிரத்தியேகமான திரவங்கள் Mobile store ல் கிடைக்கும் அந்த திரவத்தினை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. அப்படி கிடைக்கும் திரவத்தினை மைக்ரோஃபைபர் துணியில் ஒரு சொட்டு நனைத்து தொடுதிரையினை மீண்டும் சுத்தம் செய்யலாம்.
எதிர் காலத்தில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியுமாம். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர் வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால் இலகுவில் கண்டறிந்து விட முடியும் எனக் கூறப்படுகிறது. எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசர அவசரமாக ஓட வேண்டிய தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் போகலாம்.
இப் புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது iPhone ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப் படி குறுகிய தூரத்திருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இப்புதிய கண்டு பிடிப்பானது எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது குறுந்தூர அலைகளை உள்வாங்குவதால் பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்தவும் செம்மையாக்கவும் உதவுகின்றது. இது தவிர இக்குறுந்தூரஅலைவாங்கியின் தொழிநுட்பம் எக்ஸ்ரே, அல்ரா ஒலிசோதனை மற்றும் எம் ஆர் சோதனைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது. எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள், விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப் புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் படுகிறது.
ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.
இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள் மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
தொகுப்பாக்கம்
J.அபி
கொழும்பு பல்கலைக்கழகம்






